தேவையானவை:
பச்சரிசி – 3 கப்,
புழுங்கலரிசி – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – அரை கப்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.
பொடி செய்ய தேவையான பொருட்கள்:
தனியா, கருப்பு உளுந்து, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரைடீஸ்பூன்,
எள்ளு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 8,
உப்பு – தேவையான அளவு,
துருவிய கொப்பரை – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை (பொடி): முதலில் எள்ளை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மற்ற பொருள்களையும் சிவக்க வறுத்து கடைசியாக கொப்பரையை போட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும் (பருப்பு சூட்டிலேயே கொப்பரை வறுபட்டுவிடும்). ஆறியவுடன், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தோசை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து மூன்றையும் சேர்த்தே 3 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நைஸாக அரைத்தெடுக்கவும். உப்பு போட்டுக் கரைத்து ஒரு நாள் இரவு புளிக்க வைக்கவும். மறுநாள் தோசைக்கல்லில் தோசை வார்த்து உடனேயே மேலே பொடியை பரவலாக தூவி, கரண்டியில் எண்ணெய் தொட்டு மேலே லேசாக தடவிவிட வேண்டும். அடுப்பை மீடியமாக எரிய விட வேண்டும். இந்த தோசையை திருப்பிப் போடக் கூடாது. அப்படியே எடுத்துப் பரிமாறவேண்டும்.