காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பாக கை விரல்களில் லேசாக எண்ணை தடவினால் கருக்காது. வேலை முடியவும் கையை சியக்காய் போட்டு கழுவவும்.
கீரையை வேக வைக்கும்போது சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் சுவையும் மணமும் கூடும்.
இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளூந்தின் அளவை குறைத்துக் கொள்ளவும். கிரைண்டரில் உளுந்தை அரைக்கும்போது சற்றே தண்ணீரில் குறைத்துக் கொண்டு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அரைத்து எடுக்கவும். இந்த மாதிரி செய்தால் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும். தவிர இதை பிரயாணத்தின் போது எடுத்துச் செல்லலாம். இரண்டு நாள் வரை கெடாமல் இருக்கும்.
வெளியே காய்ந்தும் உள்ளே இளகியும் இருக்கும் கட்டிப் பெருங்காயத்தை அப்படியே பவுடராக்க முடியாது. கட்டி பெருங்காய டப்பாவில் ஒரு பச்சை மிளகாயை போட்டு வைத்திருந்தால், மறுநாள் பெருங்காயம் இளகியிருக்கும் அந்த இளகிய பெருங்காயத்தை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து எடுத்து வாணலியில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து தோசை கரண்டியால் அவற்றை திருப்பி திருப்பி போட்டு அப்படியே அமுக்கிக் கொடுக்கவும். அந்த வெப்பத்திலேயே அது பூரி போல் உப்பி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருக்கும் ஈரத் தன்மை போய்விடும். ஆறியதும் பவுடராக்கி சேமிக்கலாம்.
பிஸ்கட் நமத்துப் போகாமலிருக்க, டின்னில் நியூஸ் பேப்பரை விரித்து, பிஸ்கட்டை அடுக்கி வைக்கவும்.
தீப்பெட்டி நமத்துப்போகாமலிருக்க பிரிட்ஜ் ஸ்டெபிலைசர் மீது அவ்வப்போது வைக்கலாம். ஸ்டெபிலைசரின் சூடானது தீப்பெட்டியை நமுத்துப்போக விடாது.