உடல் எலும்புகள் வலிமை பெற்று, கட்டு மஸ்தான உடல் வேண்டுமா? அப்ப இத படிங்க!

உடல் எலும்புகள் வலிமை பெற்று, கட்டு மஸ்தான உடல் வேண்டுமா? அப்ப இத படிங்க!

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினம் 1 கிராம் கால்சியம் தேவை. 

குழந்தை பருவத்திலிருந்தே தேவையான அளவு கால்சியத்தை உட்கொண்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் பால் குடிப்பது கால்சியம் பெற எளிய வழி. பால், சீஸ், கீரைகள், ராகி, பிரண்டை, கொள்ளு முதலியவற்றில் கால்சியம் உள்ளது.

வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு சேர்த்துக் கொள்வதும் கால்சியத்தை பெற எளிய வழி.

உடல் கால்சியத்தை கிரகிக்க விட்டமின் ‘டி’ (D) ஒரு அவசியத் தேவை. எனவே பல கால்சியம் மாத்திரைகளில் விட்டமின் ‘டி’ சேர்க்கப்படுகிறது. புரதச் சத்தும் கால்சியத்தை கிரகிக்க உதவும். 

அரிசியில் கால்சியம் குறைவு. மீன் வகைகள், முட்டை, மாமிசம் கால்சிய தேவைக்கு ஏற்றவை.

எச்சரிக்கை : உடலில் கால்சியம் அதிகமானாலும் சிறுநீரகக் கற்கள் போன்ற பல பிரச்சனைகள்  உருவாகும். எனவே நீங்களாகவே கால்சியம் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாமல், டாக்டரை அணுகவும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!