நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா? இதை மட்டும் உதாசீனப்படுத்தாதீர்கள்

நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா? இதை மட்டும் உதாசீனப்படுத்தாதீர்கள்

40 வயதை தொட்டு விட்டால் குறிப்பாக பெண்களுக்கு
மூட்டு தேய்மான பிரச்சனை வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பெண்கள் தங்களது அன்றாட
வேலைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. வலிநிவாரணிகளை பயன்படுத்திவிட்டு தங்கள் உடலைப்
பற்றி பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். இது நாளடைவில் மிகப்பெரும் பிரச்சனையாக
மாறிவிடுகிறது.

இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை இல்லாமல்
இயற்கை முறையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிரந்தர தீர்வு கிடைக்கும். அறுவை சிகிச்சை
செய்தாலும், அதன் பயன் 10 முதல் 15 ஆண்டுகள்தான். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை அறுவை
சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இயற்கை முறையிலான சிகிச்சைகள் நீண்ட நாட்களை
எடுத்துக்கொள்ளும், ஆனால் பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கும். உடனடி தீர்வு கிடைக்கும்
மருத்துவ முறைகளால் மீண்டும் மீண்டும் வலிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்.

எடை குறைப்பு, மூட்டு வலியை கணிசமாக குறைக்க
முடியுமென்பதால், மூட்டு அழற்சியை சமாளிப்பதில் உணவு கட்டுப்பாடு பெரிதும் உதவலாம்.
கால்சியம் அதிகமாக இருக்கும் உணவை
அடர்ந்த பச்சை நிறமுள்ள, இலையுடன் கூடிய
காய்கறிகள், ஃப்ரஷ்ஷான பழங்கள், குளிர்ந்த நீரில் வாழும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
அதிகமுள்ள மீன்கள் போன்றவற்றை சாப்பிடுவதும், பதப்படுத்தப்பட்ட, தெவிட்டிய கொழுப்புள்ள
உணவை தவிர்ப்பதும் எடையை மட்டுமின்றி வலியையும் குறைக்க உதவும். மாமிசம், பால் பொருட்கள்,
கோதுமை ஆகியவற்றையும், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய், கத்தரிக்காய் போன்ற நைட்ஷேட்
என அழைக்கப்படும் ஸொலானேஸி குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளையும் தவிர்க்கும் உணவு
திட்டங்கள் சிலருக்கு பலன் தருகிறது.

அலுவலகப் பணிகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் 8 மணி நேரம் ஒரே இடத்தில்
அமர்ந்து வேலை செய்யும் பொழுது அவர்களுக்கு இந்த பிரச்சனைகள் உண்டாகிறது. ஒருமணி நேரத்திற்கு
ஒருமுறை தங்கள் கை கால்களை அமர்ந்த நிலையில் நீட்டியும் மடக்கியும் சிறுசிறு அசைவுகளை
உடலுக்கு கொடுக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு செய்வதினால் ஒரே இடத்தில்
அமர்வதால் உண்டாகும் தோள்பட்டை வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை சரியாகும். அதேபோல்
தினமும் காலை, மாலை இரு வேளையும் ஒரு அரைமணி நேரமாவது நடக்கவேண்டும். வீட்டில் ஓய்வாக
இருக்கும் நேரங்களில் எளிமையான உடற்பயிற்சிகளை செய்தல் வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்