கர்ப்பிணி பிரசவத்திற்கு தயாராவது எப்படி?

கர்ப்பிணி பிரசவத்திற்கு தயாராவது எப்படி?

·        
கர்ப்பிணியின் மெடிக்கல் ஃபைல் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். இதில்தான் கர்ப்பிணியின் ரத்த வகை தொடங்கி, அவருடைய பிரச்னைகளையும் மருத்துவர் குறிப்பிட்டிருப்பார். அதனால் கர்ப்பிணியுடன் இந்த ஃபைல் அவசியம் எப்போதும் இருக்க வேண்டும்.

·        
டூத் பிரஷ், பேஸ்ட், டவல், சோப்பு, எண்ணெய், கேர் கிளிப் போன்றவை கர்ப்பிணிக்கு மட்டுமே என பிரத்யேகமாக எடுத்துவைக்க வேண்டும்.

·        
தளர்வாக இருக்கும்படி கர்ப்பிணிக்கான இரவு மற்றும் பகல் உடைகள் மற்றும் குழந்தைக்கு தேவையான குட்டியூண்டு சட்டை, டயபர் போன்றவை தயாராக இருக்க வேண்டும்.

·        
இன்று செல்போன் இல்லாத நபரை பார்க்கமுடியாது. அதனால் செல்போன், சார்ஜர், தேவையெனில் பாட் போன்றவையும் கர்ப்பிணிக்குத் தேவைப்படும்.

பிரசவம் நெருங்கிவிட்ட நேரங்களில் எப்போதும் ஒரு நபர் கர்ப்பிணியுடன் இருக்கவேண்டும். எந்த காரணத்துக்காகவும் கர்ப்பிணியை தனியேவிடக் கூடாது. இந்த நேரத்தில் கர்ப்பிணிக்கு பிடித்தமான உணவு செய்துகொடுக்க அல்லது வாங்கிக்கொடுக்க வேண்டும். இதுபோன்ற ஏற்பாடுகள் கர்ப்பிணியின் பிரசவ அனுபவத்தை சுகமாக மாற்றிவிடும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்