கருவறையில் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது? அதன் நிலை அங்கு என்ன? - Tamil Tips - Pregnancy Tips in tamil

கருவறையில் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது? அதன் நிலை அங்கு என்ன?

பெண்கள் கர்ப்பம் தரித்த அந்நொடி முதல் குழந்தை நல்ல முறையில் பிறந்து மண்ணைத் தொடும் வரை, அவர்களின் மனது அக்குழந்தையையே எண்ணி வட்டமிட்டுக் கொண்டிருக்கும்..! அப்படி குழந்தையை பற்றி எண்ணும் பொழுது குழந்தையின் வளர்ச்சியை அறிய மிகவும் ஆவலாக இருக்கும் தாயுள்ளம்..! தாயின் அத்தகைய ஆசைகளை தீர்க்கவே, காணொளியுடன் கூடிய இப்பதிப்பை அளிக்கிறோம்..! படித்து அறியவும்..! கண்டு மகிழவும்..!

1-5 வாரம் 

ஆதியில், கருமுட்டையானது விந்தணுவுடன் சேர்ந்து, கடுகு அளவில் இருக்கும்; இந்த நேரத்தில் கருவில் சுமார் 32 செல்கள் இருக்கும். 4 வாரங்களுக்கு பிறகு, 5வது வாரத்தில், அக்கரு சற்று வளர்ந்து, சிறிய மிளகு அளவு இருக்கும்; இக்காலத்தில் தான் இதயம், இரத்த நாளங்கள், தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சி பெற தொடங்கும். இவ்வாரத்தில், கரு சுமார் 0.05 அங்குலம் இருக்கும். 

7-18 வாரம்

7 வாரத்தில், கரு 1/2 அங்குலம், அதாவது ஒரு பெர்ரி பழ அளவில் இருக்கும்; 9 வாரத்தில் உங்கள் குழந்தை செர்ரி பழ அளவில் இருக்கும். இவ்வாரத்தில் தான், கரு ஒரு உருப்பெற்ற கருவாகி இருக்கும்.

15வது வாரத்தில் , குழந்தை ஒரு ஆப்பிள் பழ அளவில், அதாவது 4 அங்குலம் இருக்கும்; இவ்வாரத்தில் குழந்தை மெதுவாக நகரத் தொடங்கும்.

18வது வாரத்தில் குழந்தை 6 அங்குல இருக்கும். 19 ஆவது வாரத்தில், குழந்தையின் கால்கள் வளரத் தொடங்கும்.

22-42 வாரம்

22 வாரத்தில், குழந்தை சுமார் 10 அங்குல அளவில் இருக்கும்; இக்காலத்தில் குழந்தையின் நுரையீரல் வளரத் தொடங்கும்.

30வது வாரத்தில் கருவறையிலுள்ள குழந்தை தூங்குவதையும், விழித்துக் கொண்டிருப்பதையும் உணரலாம். 30வது வார காலத்தில், குழந்தை சுமார் 15 அங்குல அளவில் இருக்கும்.

40-42வது வார காலங்கள் கர்ப்ப காலம் முடிவடையும் நேரமாகும்; இக்காலத்தில் குழந்தை 20 அங்குல அளவில் இருக்கும்.

Related posts

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…

இரட்டைக் குழந்தைகள் பிறக்க என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட?

தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 11 முக்கிய விஷயங்கள்…