இந்த சிகிச்சையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவது இல்லை.
இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை நோக்கி ஒரு கம்பியுடன் கூடிய ஒரு பலூனைச் செலுத்தி, அடைக்கப்பட்ட ரத்தக் குழாய் விரிவுபடுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட குழாய் மீண்டும் சுருங்காமல் இருக்கவும், ரத்தக் குழாய் துவாரத்தை அதிகப்படுத்தவும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு கம்பிவலை பொருத்தப்படும்.
இதற்கு ‘ஸ்டென்ட் (stent )என்று பெயர்.
இதனால் ரத்த ஓட்டம் சீராகி மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.