·
நிறைய நிறைய தண்ணீர் குடிக்கவேண்டியது கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியம் ஆகும். அடிக்கடி சிறுநீர் வருகிறது என்பதற்காக தண்ணீர் குடிப்பதை நிறுத்தவோ, குறைக்கவோ கூடாது.
·
தண்ணீர் தவிர்த்த திரவ வகையிலான காபி, டீ போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது.
·
பாத்ரூமில் முன்னே சாய்ந்து அமர்ந்து சிறுநீர் கழித்தால் சிறுநீர்ப் பை முழுமையாக காலியாகிவிடும். அதனால் மீண்டும் நிரம்புவதை தாமதப்படுத்தலாம்.
·
பகலைவிட இரவில் எழுவது சிரமமாக தோன்றினால், இரவு 8 மணிக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதை குறைத்துக்கொள்ளலாம். இதனாலும் ஓரளவு ஆறுதல் கிடைக்கலாம்.
பாத்ரூம் செல்வதற்கு பயந்து தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலில் நீர் வற்றிப்போய் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து நேர்ந்துவிடும். அதனால் இந்தப் பிரச்னையை கர்ப்பத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள கர்ப்பிணி முன்வரவேண்டும்.