ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் தயாரிப்பது எப்படி? | Prepare Homemade Oatmeal Soap in Tamil

ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் தயாரிப்பது எப்படி?

உணவு முதல் உடைகள் வரை…குழந்தைகளுக்கு நாம் தனி கவனம் எடுத்துக் கொள்வோம். அதுபோல அவர்கள் சருமத்துக்கு நாம் சிறந்த பராமரிப்பைத் தர வேண்டும். ஓட்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். இது சரும பராமரிப்புக்கு மிகவும் உதவும். ஓட்ஸையே சோப்பாக, (Homemade Oatsmeal soap for babies) பயன்படுத்தினால் சருமம் ஆரோக்கியமாகும்.

அதற்கு நீங்கள் வீட்டிலே ஹோம்மேட் சோப் தயாரித்தால், கெமிக்கல்கள் அதிகம் இல்லாத சோப்பால், குழந்தையின் சருமம் நன்றாகவே பாதுகாக்கப்படும். இதனால் உங்களுக்கு செலவும் குறைவு.

வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் (How to make Homemade Oats meal Soap?)

தேவையானவை

  • நிறமில்லாத டிரான்ஸ்பரன்ட் சோப் – 1
  • பாதாம் பால் – 4-5 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
  • பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
  • சோப் மோல்டு (அல்லது) பேப்பர் கப் – 3

செய்முறை

  • நிறமில்லாத டிரான்ஸ்பரன்ட் சோப்பை, கத்தியால் மெல்லியதாக அறிந்து கொள்ளுங்கள்.
  • முழு சோப்பையும் மெல்லியதாக அறிந்து கொண்டு, ஹாண்டில் வைத்த ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் அறிந்த சோப் துண்டுகளைப் போட்டு கொள்ளுங்கள்.
  • ஒரு கண்ணாடி பவுலில், பாதாம் பால் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • மேலும், அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அதே பவுலில் 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸையும் சேர்க்கவும். மேலும் 1 டேபிள் ஸ்பூன்
    அளவுக்கு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: குழந்தைகளைக் குளிப்பாட்டி பராமரிப்பது எப்படி?

  • ஸ்பூனால் இவற்றை நன்கு கலக்கி கொள்ளுங்கள். குறைந்தது 3 நிமிடங்கள் வரை நன்றாக கலக்கவும்.
  • கலக்கியவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • கலந்த கலவை கெட்டியாக இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் பால் கலந்து கலக்கினால் கலவை கூழாக இருக்கும். நீர்த்த பதத்தில் இருக்க வேண்டும். கட்டியாக இருக்க கூடாது.
  • 2 நிமிடங்கள் வரை நன்றாக கலக்குங்கள்.
  • அடுத்ததாக, அடுப்பில் ஒரு பெரிய அகலமான பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் பாதி அளவு நிரப்பி மிதமான தீயில் வைத்து சூடேற்றவும்.
  • தண்ணீர் சூடானதும், சோப் இருக்கும் ஹாண்டில் வைத்த பாத்திரத்தை, அகலமான பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் வைக்கவும். இதைதான் டபுள் பாயிலிங் முறை (Double Boiling Method) என்று சொல்வார்கள்.
  • ஹாண்டில் வைத்த பாத்திரத்தில் உள்ள சோப் அப்படியே கரைய ஆரம்பிக்கும்.
  • சோப் நன்றாக கரைந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள்.
  • ஏற்கெனவே ஓட்ஸ், பால் பவுடர் கலந்து வைத்த கண்ணாடி பவுலில், கரைத்து வைத்த சோப்பை ஊற்றி ஸ்பூனால் நன்றாக கலக்கவும்.
  • சூடு ஆறுவதற்கு முன்பே, அதாவது இளஞ்சூடாக மாறும் முன்பே சோப் மோல்டில் இந்த கலவையை ஊற்றி விடுங்கள்.
  • உங்களிடம் சோப் மோல்ட் இல்லையென்றால் சாதாரண 3-4 பேப்பர் கப்களில் உள்பக்கம் வாஸிலினை தடவி (இட்லி தட்டில் எண்ணெய் தடவுவது போல) வைத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த சோப் கலவையை ஊற்றலாம்.
  • 6-7 மணி நேரம் அப்படியே விட்டால், கட்டியாகிவிடும்; சோப்பாகி விடும். பிறகு சோப்பை நீங்கள் எடுத்துவிடலாம். அல்லது ப்ரீஸரில் வைத்தாலும் கட்டியாகி விடும்.
  • அவ்வளவுதான். ஓட்ஸ் மீல் சோப் ரெடி.
  • வீட்டிலே ஈஸியாக தயார் செய்யலாம்.

குறிப்பு

  • கெமிக்கல்கள் மிக மிக குறைவு என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
  • ஒரு சோப்பை பயன்படுத்தி செய்தால் 3-4 சோப் வரை நமக்கு கிடைக்கும். இதனால் செலவும் மிச்சம்.
  • சோப் செய்யும் நேரமும் அரை மணி நேரத்துக்குள்தான் ஆகும்.
  • தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நீங்கள் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சோப் மோல்டு கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தலாம்.
  • 0 – 6 மாத குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.
  • 6 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

இதையும் படிக்க: 5 நிமிடங்களில் 2 விதமான ஹோம்மேட் பேபி ஷாம்பு செய்வது எப்படி? 

சோப்புக்கு நிறம் வேண்டுமா?

  • சோப்பை முடிந்த அளவுக்கு நிறமில்லாத சோப்பைத் தேர்ந்தெடுங்கள்.
  • உங்களுக்கு நிறம் இருக்கும் டிரான்ஸ்பரன்ட் சோப்தான் கிடைத்தால், அதையே பயன்படுத்தலாம். தவறில்லை.
  • உங்களுக்கு சோப் அழகான நிறத்தில் வேண்டுமென்று நினைத்தால், ஒரு சிட்டிகை குங்குமத்தை தேங்காய் எண்ணெயில் கலக்கி சோப் கலவையில் ஊற்றி விட்டால் சிவப்பு சோப்பாக கிடைக்கும்.

  • நீல நிறத்தில் உங்களுக்கு சோப் வேண்டுமென்றால், சங்கு பூவை, 20 மில்லி சூடான சுடுநீரில் போட்டு ஊற வையுங்கள். அதில் நீல நிறம் கலந்துவிடும். அதிலிருந்து சில துளிகள் சோப் கலவையில் விட்டால் நீல நிறம் கிடைக்கும்.
  • வேப்பிலை சாறு சில துளிகள் விட்டால், பச்சை நிறத்தில் சோப் கிடைக்கும்.
  • இதுபோல உங்களுக்கு இயற்கையான முறையில் நீங்கள் நிறத்தை சேர்த்துக் கொள்ளலாம். செயற்கை நிறத்தைத் தவிர்க்கவும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி? 

சோப்புக்கு நல்ல வாசனை வேண்டுமா?

  • ஸ்வீட் ஆரஞ்சு, லெமன், லாவண்டர், டீ ட்ரி எண்ணெய், பெப்பர் மின்ட், லெமன் கிராஸ், ரோஜா போன்ற அரோமா எசன்ஷியல் எண்ணெய் ஏதேனும் ஒன்று எடுத்து, சோப் கலவையில் 3-4 துளிகள் விட சோப் வாசனையாக இருக்கும்.
  • 0-1 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சோப் தயார் செய்தால், வாசனை எண்ணெய் ஊற்ற வேண்டாம்.
  • 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு சோப் தயாரித்தால், மேற்சொன்ன வாசனை எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…