0 - 5 வயது குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் அவர்கள் கடக்க வேண்டிய மைல்கற்களும்

0-5 வயது குழந்தைகளின் மூளை வளர்ச்சி எப்படி இருக்கும்? இதெல்லாம் செய்கிறார்களா?

குழந்தையின் முதல் ஐந்து வருடங்கள் மிக முக்கியமானது. இந்த காலகட்டத்தில்தான், குழந்தைகள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் கற்றுக்கொள்கின்றனர். உதாரணமாக சாப்பிடுவது, நடப்பது, பேசுவது, மற்றவர்களுடன் பேச  முயற்சிப்பது, தன்னைப் பற்றி அறிந்து கொள்வது ஆகிய மூளை வளர்ச்சிக்கான அனைத்தையும் பெறுகின்றனர். இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு மிக வேகமாகவே மூளையின் வளர்ச்சியிருக்கும். இந்தப் பருவத்துக்கான வளர்ச்சி, தன் வாழ்நாளில் மீண்டும் கிடைக்காது. எனவே, சிறு வயதில் குழந்தைக்கு தேவையான மூளை வளர்ச்சி இருந்தால்தான் அவர்களது வாழ்வில் அவர்களால் வெற்றியடைய முடியும்.

0 முதல் 5 வயதுவரையிலான குழந்தையின் மூளை வளர்ச்சி – மைல்கற்கள்: (Child’s Brain Development from 0 to 5 years old – Few Milestones)

குழந்தைகளின் ஐந்தாவது பிறந்தநாள் வரை அவர்களின் மூளை வளர்ச்சியும் அதற்கேற்ற மைல்கற்கள் பற்றியும் விரிவாகக் காணலாம்.

ஒரு வருடம்(First Year)

பிறந்த குழந்தையானது முதல் வருடத்தில் பின்வரும் வளர்ச்சி நிலைகளை அடைந்திருக்கவேண்டும். உங்கள் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.

6 வாரத்துக்குள் : புன்னகை

குழந்தையின் கண் பார்வையின் திறன் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்றதும், குழந்தையால் தனித்தனி ஆட்களைப் பார்க்க முடியும். அவர்கள் பார்ப்பதை வைத்து அவர்களின் சைகைகளும் அமையும். 6-வது வாரத்தில் அவர்கள் ஆட்களை அடையாளம் கண்டு சிரித்தால், அவர்களுக்கான உணர்வு ரீதியான வளர்ச்சி சீராக இருப்பதாக உணரலாம். சில குழந்தைகள் முன்பாகவே புன்னகை செய்திருக்கலாம். ஆனால், அது சாதாரண விஷயமாக இருக்கும். 6-வது வாரத்தில் புன்னகைப்பதே சரியான வளர்ச்சிக்கான அடையாளம்.

2 வது மாதம் : கவனிப்பது மற்றும் முகங்களைத் தெரிந்து வைத்திருப்பது

பிறந்த குழந்தையின் பார்வைத்திறன் மங்கலாக இருக்கும். 8-12 இன்ச் வரைதான் அவர்களால் பார்க்க முடியும். ஆனால், 2வது மாத முடிவில் அவர்களுக்கு பார்வைத்திறன் நன்றாகவே வளர்ந்திருக்கும். இரண்டாவது மாதத்தில், தனக்கு நெருங்கிய உறவுகளின் முகத்தை குழந்தைகளால் எளிதில் அடையாளம் காணமுடியும்.

3 வது மாதம் : சத்தம் செய்வது

குழந்தைகள் மூன்றாவது மாதத்தில் ங்கே, ங்கா, ஊஊ போன்றெல்லாம் சத்தமிடுவார்கள். இதுமட்டுமில்லாமல் ஏதோ சில முனகல் சத்தங்களைக் கூடச்செய்வார்கள். இது குழந்தைகள் பேசுவதற்கான தொடக்க காலப்பயிற்சி. குழந்தை பேசுவதற்காக தன்னைத் தயார் செய்துகொள்வதற்கான ஆரம்பநிலை.

3.5 மாதம் – 4 மாதம் : சிரிப்பது

தன்னுடைய முதல் மூன்றரை மாதத்திலும் கூட குழந்தைகள் சிரிக்கும். ஆனால் 4-வது மாதத்தில் தனக்குத் தெரிந்தவர்கள், அவர்களின் செய்கைகளைப் பார்த்தும் சிரிக்க ஆரம்பிக்குமென ஆய்வுகள் சொல்கின்றன. இப்படி சிரிப்பது குழந்தைக்கான நல்ல வளர்ச்சி நிலையே.

5வது மாதம் : ஒளிந்து விளையாடுவது

தன்னுடைய நான்காவது மாதத்தில் சில பொருட்கள் தன்னுடைய உலகிருந்து மறைகிறது எனக் குழந்தைகள் நம்பும். ஆனால், மிக விரைவிலே தன் கண் பார்வையிலிருந்துதான் மறைகிறதே தவிர ஒரே அடியாக மறையவில்லை எனக் குழந்தை புரிந்து கொள்ளும். இது குழந்தையின் திறனையும் தலையில் உள்ள முன் புற மடல்களின் வளர்ச்சியாலும் நடைபெறுகிறது. கண் பொத்தி விளையாடுவது, மறைந்து விளையாடுவது போன்றவை குழந்தைக்குப் பிடிக்கும். இதனால் முகங்களை அடையாளம் கண்டு சிரிக்கும்.

6வது மாதம் : பொருட்களைக் கையில் இருந்து கைகளில் வாங்குவது

இந்தக் காலத்தில் குழந்தைகள் பொருட்களை தன் கைகளில் பிடிப்பது, ஒரு கையிலிருந்து ஒரு கைக்கு மாற்றுவது, தன் அருகில் பொருட்களை கொண்டு வருவது போன்றவற்றை செய்யும். பிடரி மண்டையின் வளர்ச்சி, குழந்தையின் மோட்டார் ஸ்கில்ஸ் எனும் திறனின் வளர்ச்சிக்கான அடையாளங்கள்.

7வது மாதம் : தன் பெயரை அறிந்து கொள்வது

குழந்தை தன்னுடைய பெயரை தானே அறிந்து கொள்வது வளர்ச்சிக்கான அடையாளம். தன் பெயரை சொல்லி அழைப்பவரையும் தன் பெயர் இதுதான் என்பதையும் அறிந்து அதற்கு ரெஸ்பான்ஸ் செய்யும். இந்தப் பருவத்தில் தன் பெயரை அறியாத குழந்தை, பிற்காலத்தில் படிக்கும் திறனில் பிரச்னைகளைச் சந்திக்குமென ஆய்வுகள் கூறுகின்றன.

12வது மாதம் : சின்ன சின்ன கட்டளைகளைப் பின்பற்றுவது

இந்தப் பருவத்துக்கு முன்னரே குழந்தைகள் சில வார்த்தைகளை பேசத் தொடங்கியிருக்கும். புரிந்து கொள்ளவும் செய்யும். 10-12 மாதங்களில் குழந்தை பேச ஆரம்பித்துவிடும். இங்கே வா, அங்கே போகாதே, பந்தை இங்கே போடு போன்ற சின்ன சின்ன கட்டளைகளை புரிந்து செயல்படும். மூளையின் டெப்போரல் லோப் என்ற வளர்ச்சிக்கான அடையாளம் இவை.

2வது வருடம் – குட்டிக்குட்டி வார்த்தைகள்

தன்னுடைய முதல் பிறந்தநாளுக்குள், பேசுவதில் நிறையவே முன்னேற்றம் அடைந்திருப்பார்கள். அம்மா, அப்பா, அத்தை, தாத்தா என குட்டிக்குட்டி வார்த்தைகளை நன்றாகவே உச்சரிப்பார்கள். தன்னுடைய தாய்மொழி அவர்களுக்கு புரியும். பிறக்கும்போது இருந்ததைவிட இப்போது அவர்களது செரிபெல்லம் 3 மடங்கு வளர்ச்சி பெற்றிருக்கும்.

கிறுக்குதல் அல்லது வரைதல்

ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ், கண் – கை ஒத்துழைப்பால் செய்யும் செயல்கள் ஆகியவை பாசிட்டிவ்வான வளர்ச்சிநிலை. அதைத்தான் அவர்கள் கிறுக்குவது மூலமாக செய்வார்கள். தன்னுடைய உலகத்தில் குழந்தைகள் காண்பதையெல்லாம், வரைந்தோ அல்லது கிறுக்குவது போன்ற செயல்களின் மூலமாகவே  செய்வார்கள். இதெல்லாம் தன் உலகத்தை அவர்கள் காண்பது மற்றும் புரிந்து கொள்வது போன்றதுக்கான நல்லவொரு வளர்ச்சிநிலை.

பொருட்களைக் காண்பிப்பது

12-18 மாத காலத்தில் குழந்தைகள் பொருட்களைப் பார்த்தோ அல்லது யாரேனும் இந்தப் பொருளை சொன்னால் அதை அடையாளம் காட்டுவது போன்றவற்றை செய்வார்கள். 18 மாதத்தில் சில வார்த்தைகளையே பேசுவார்கள். அதையே திரும்பத் திரும்ப சொல்வார்கள். பேசும் போது சில வார்த்தைகளை மேட்ச் செய்து, முன்பு பேசியதை அல்லது பேசுவதை அல்லது கேட்டதை நினைவில் வைத்துப் பேசுவார்கள்.

3வது வருடம்

மூன்றாவது வருடத்தில் குழந்தையானது பின்வரும் வளர்ச்சி நிலைகளை அடைந்திருக்கவேண்டும். உங்கள் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.

கதைகளைச் சொல்வது

கதைகளைச் சொல்வது என்பது சரியான மூளை வளர்ச்சிக்கான அடையாளம் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். 2வது பிறந்தநாளுக்குப் பிறகு குழந்தைகள் பேசும் வார்த்தைகளும் அதிகமாக இருக்கும். கதைகள், நடந்ததை சொல்வது, விவரிப்பது, தங்களிடம் பேசுபவரிடம் உரையாடுவது போன்றவற்றை செய்வார்கள்.

எதிர்மறையாக செயல்படுவது

பெரும்பாலும் இந்தக் காலத்தில் குழந்தைகள் ‘நோ’ சொல்வதைப் பெற்றோர்கள் பார்ப்பார்கள். இதெல்லாம் குழந்தையின் வளர்ச்சி நிலைதான். குழந்தை சுயமாக தன் வளர்ச்சியை அடைவது என்பதைக் குறிக்கிறது. அதாவது குழந்தையின் மூளையானது, சரி, தவறு என்ற இரண்டையும் லாஜிக்கலாக வளர்க்கிறது என அர்த்தம். இதுவும் வளர்ச்சிக்கான அடையாளம்.

தன் திறமையால் செயல்படுவது

3வது வயதிலே தன் பெற்றோர் யார், தன் பாதுகாப்பாளர் யார் எனப் புரிந்து வைத்திருக்கும். அதுபோல நடந்துகொள்ளும். புதிய சூழலுக்கு சென்றால் தன் பெற்றோரிடம் மட்டுமே சௌகரியமாக உணரும்.

புதிய ஆட்களைப் புரிந்துகொள்வது

3வது வயதிலே குழந்தையின் மூளை நன்றாக வளர்ச்சி பெற்றிருக்கும். ஃப்ரிஃப்ரன்டல் கார்டெக்ஸ் நன்றாக வளர்ச்சி பெற்றிருப்பதால், மொழி திறன், பேசும் திறன் நன்றாக இருக்கும். வாக்கியங்களை சரியாக பேசி முடிப்பது, கேள்விகள் கேட்பது, தெரியாதவர்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டு செயல்படுவது ஆகியவற்றை செய்வார்கள்.

4வது வருடம்

நடிப்பு விளையாட்டு

3-4 வயதில் குழந்தைகள் தனக்கு பிடித்தவர்களை போல நடிக்க செய்வார்கள். டாக்டர், டீச்சர் என தனக்குப் பிடித்தவர்களைப் போல நடிப்பார்கள். அவர்களுடைய சூழலை, நன்றாகக் கவனித்து அவர்களைப் போல செயல்பட முற்படுவது, கற்பனைகளால் செயல்படுவது போன்றவையெல்லாம் வளர்ச்சியின் அறிகுறிகள்தான்.

கணிக்கத் தொடங்குவார்கள்

இடது காதுக்கு பின்னால் உள்ள முளையின் சிறு பகுதியின் பெயர் ‘ நம்பர் மாட்யூல்’. இது உள்ளுணர்வு திறனைத் தரக்கூடியது. ஒரு குழந்தையால் தன் 2வது வயதிலே கணிக்க ஆரம்பிக்கத் தொடங்கினாலும் 3-5 வயதுக்குள் மிக அதிகமாகவே உள்ளுணர்வு திறனைப் பெற்று கணிக்கத் தொடங்குவார்கள்.

ஒத்துழைக்கத் தொடங்குவது

சாப்பிடுவதைத் தவிர குழந்தைகள் 2வது வயதிலே விளையாட செய்தாலும் அது வளர்ச்சியுடன் கூடிய விளையாட்டல்ல. என்னதான் மற்ற சிறு குழந்தைகளுடன் அவர்கள் விளையாடினாலும் அவர்கள் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். 4 வயதுக்குப் பின் தான், தன் திருப்பங்களை அறிந்து கொள்கின்றனர். தன் விழிப்புணர்வு அதிகரித்து, பேச்சு வார்த்தை திறன்களை அறிந்து கொள்ளவும் செய்கின்றனர். தன் விளையாட்டில் உள்ள மோதல்களை சமாளிக்கவும் கற்றுக் கொள்கின்றனர்.

எழுத்துகளை எழுதுவது

குழந்தைகள் சிறு வயதிலே கிறுக்கத் தொடங்கியிருப்பர். மோட்டார் ஸ்கில்ஸின் வளர்ச்சியால் பென்சில், கிரெயான் போன்றதை வைத்துக் கிறுக்கி இருப்பார்கள். ஒரு எழுத்தை எழுதுவது, அதைப் புரிந்து கொள்வது, அதை தன் நினைவில் வைத்திருப்பது, தான் என்ன எழுதுகிறோம் என்பதையும் புரிந்து கொள்வது போன்றவற்றை தன் 4-ம் வயதில் அவர்கள் முழுமையான வளர்ச்சியைப் பெறுகின்றனர்.

இதெல்லாம், குழந்தைகளின் வளர்ச்சிக்கான அறிகுறிகள். எனினும், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் பெற்றவர்கள். ஒவ்வொரு வளர்ச்சியையும் அவர்கள் அடைவதற்கு சில காலம் முன், பின் இருக்கலாம். பெற்றோராக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், குழந்தையை நன்கு கவனிப்பது, சத்தான உணவைக் கொடுப்பது, நல்ல சூழலில் அவர்களை வளர்ப்பது போன்றவையெல்லாம் மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

ஊட்டச்சத்துகள் நிறைந்த சப்ளிமென்ட்களும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும். என்ஃபாக்ரோ (Enfagrow) எனும் சப்ளிமென்ட்டில் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன. மழலைகளின் வளர்ச்சி நிலைக்கு இந்த சப்ளிமென்ட் மிகவும் உதவும். என்ஃபாக்ரோ ஏ+ எனும் சப்ளிமென்டில் கொலைன், ஜின்க், ஐயோடின், இரும்புச்சத்து, விட்டமின் பி ஆகியவை உள்ளன. டி.எச்.ஏ குழந்தைகளுக்கான மிகவும் முக்கியமான ஒன்று. மூளை மற்றும் கண்களின் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். ஒரு நாளைக்குத் தேவையான டி.எச்.ஏ, என்ஃபாக்ரோ எனும் சப்ளிமென்ட்டிலிருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும்.

இதனுடன், நீங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களுடன் சேர்ந்து படிப்பது, குழந்தைகளின் கஷ்டமான சூழல்களைப் புரிந்து அவர்களுக்குத் துணையாக நிற்பது, மனரீதியாக அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்வது ஆகியவற்றைப் பெற்றோர் அவசியம் செய்ய வேண்டும். இந்த ஆரம்பக்கால 5 வருட பருவநிலை குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். இதைத் திரும்ப பெற முடியாது என்பதால் கவனமாகக் கையாளுங்கள்.

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…