சுருக்கங்கள் உங்களை முதுமையாக காண்பிக்கிறதா? இதோ இளமை தோற்றத்திற்கான கேரளா வைத்தியம்!

சுருக்கங்கள் உங்களை முதுமையாக காண்பிக்கிறதா? இதோ இளமை தோற்றத்திற்கான கேரளா வைத்தியம்!

ஆலிவ் ஆயில் பொதுவாக சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கக்கூடியது, எனவே தினமும் ஆலிவ் ஆயிலை தங்களது கை மற்றும் கால்களில் நன்றாக தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும், பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைய செய்வதுடன், சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.

தக்காளியை சரி பாதியாக அறிந்து கொண்டு, அவற்றை தங்களது கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை மற்றும் கால்களில் உள்ள கருமை நிறங்கள் மற்றும் சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து, மிகவும் வெண்மையாக காட்சியளிக்கும், இந்த முறையை தினமும் செய்து வர வேண்டும்.

வாழைப்பழம் சரும பராமரிப்புக்கு அதிகளவு உதவுகிறது. இந்த வாழைப்பழத்தை தினமும் நன்றாக மசித்து அவற்றை கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய, சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைவதுடன், கை (Wrinkles Hands) மற்றும் கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த முறையை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் வாரத்தில் இரண்டு முறை செய்து வரவும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!