இதன் அறிகுறி – இடது அடிவயிற்றிலும்,முதுகிலும் தாங்கமுடியாத வலி,வாந்தி வருவது போன்ற உணர்வு. இந்தக் கற்கள் ஒரு மி.மீ லிருந்து ஒரு இஞ்ச் அளவு கூட இருக்கலாம். அதிக என்ணிக்கையில் உருவாகி உபாதை ஏற்படுத்தும் போது நீங்கள் மருத்துவரை நாடினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பார். லேசர் சிகிச்சை செய்யலாம் என்பார்.
ஆனால் இவை எல்லாம் சிறுநீரகத்தை பாதிக்கக் கூடிய வைத்திய முறைகள் தான். நமது தமிழ் மருத்துவர்களான சித்தர்கள் இதற்காக எளிமையான சிகிச்சை முறையை நமக்கு தந்திருக்கிறார்கள். அதுவே ஆனைநெருஞ்சி கசாயம்.
நமது நாட்டுமருந்துக் கடைகளில் ஆனைநெருஞ்சி முள் கிடைக்கும். அதனை வாங்கி வந்து ஐம்பது கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை இரவு ஒரு பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து விடுங்கள். அதிகாலை எழுந்து ஊறவைத்த நெருஞ்சி முள்ளோடு மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து ஒன்றரை டம்ளராக சுண்டும் வரை காய்ச்சி அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கசாயத்தை இளம்சூட்டில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.அதன் பிறகு ஒருமணி நேரம் வேறு எதுவும் சாப்பிட வேண்டாம். அப்போது தான் இந்த மருந்தின் தன்மை நமது ரத்தத்தில் கலந்து வேலை செய்யும். இதே போல கற்களின் அளவு எண்ணிக்கைக்கு தகுந்தபடி மூன்று முதல் பத்து நாட்கள் வரை இந்த மருந்தை பயன் படுத்தலாம்.
நீங்கள் வியக்கும் படி சிறுநீரக கற்கள் கரைந்து சிறுநீரோடு வெளியேறுவதைக் காண்பீர்கள். மிகக் குறைந்த செலவில் அறுவை சிகிச்சை இன்றி எளிய முறையிலான வைத்தியம்.