தாங்கமுடியாத கழுத்து வலியா? இதோ மருத்துவத் தீர்வு!

தாங்கமுடியாத கழுத்து வலியா? இதோ மருத்துவத் தீர்வு!

இள வயதினரையும் பாதிக்கும் கழுத்து வலியில் இருந்து எப்படி நிவாரணம் பெறுவது என்பதை விவரிக்கிறார், விருதுநகரைச் சேர்ந்த பிரபல பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான ஏ.டி.சி.முருகேசன்.ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு தான் இந்த வலி அதிகம் ஏற்படுகிறது. விபத்து, தசை பிடிப்பு, அதிக எடை தூக்குவது மற்றும் தவறான நிலையில் படுத்து உறங்குவது போன்ற பல காரணங்களால் கழுத்துவலி உருவாகிறது. 

இதுதவிர, கழுத்து பகுதியில் உல்ள எலும்புகள் வலிமையை இழந்து மெலிவடைவதாலும் கழுத்துவலி உருவாகலாம். வயது அதிகரிக்கும்போது பாதிப்பும் அதிகமாக ஏற்படுகிறது. கழுத்து எலும்புகளுக்கு அருகில் உள்ள தசைகள்,தசை நார்கள் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாலும் கழுத்து வலி ஏற்படுகிறது.

இப்போது கழுத்து வலி இளைய தலைமுறையினருக்கும் அதிகம் ஏற்படுகிறது என்பதுதான் ஆச்சர்யமான விஷயம் இதற்கு முதன்மையான காரணம் கம்யூட்டரை தவறுதலாக பயன்படுத்துவது. ஆம், கம்யூட்டரில் காலை முதல் இரவு வரை அமர்ந்து வேலை பார்க்கும் நிலை முக்கிய காரணமாக இருக்கிறது. இதுதவிர, உடற்பயிற்சி செய்யாத காரணத்தாலும் கழுத்துவலி, முதுகு வலி போன்றவை ஏற்படலாம். அதனால், கம்யூட்டர்களுக்கு எதிரே அமரும் போது சரியான நிலையில் நேராக அமர்ந்து வேலை செய்ய வேண்டும்

  அறிகுறிகள் 

* கழுத்து வலி தலையின் அடிப்பகுதியில் இருந்து தோள்பட்டை வரை பரவுகிறது. 

* தூங்கி எழுந்த பின் கழுத்தில் தசை இறுக்கமாகத்தெரியும். 

* தலை வலி, தலை சுற்றல், கை மரத்துப் போதல் போன்றவை இருக்கும். இதன் காரணமாக தூக்கமின்மை ஏற்படும்.

சிகிச்சை

கம்ப்யூட்டர் பணி புரிபவர்கள் சரியான நிலையில் அமர வேண்டும் என்பது மட்டுமின்றி, செய்யும் வேலைக்கு இடையில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் ஒரே நிலையில் இருக்கக்கூடாது.

கழுத்துப்பட்டை அணிவதன் மூலமும் வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலமும் வலியைக் குறைக்கலாம். 

பிசியோதெரபி முறையில் கழுத்து வலிக்கு விரைவில் தீர்வு கிடைக்கிறது. குறிப்பாக ஹாட் அண்ட் கூல் தெரபி, செர்விகல் டிராக்சன் போன்றவை மூலம் தீர்வு கிடைக்கிறது. இதுதவிர பிசியோதெரபிஸ்ட் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ளும் உடற்பயிற்சிகளும் வலியைக் குறைக்கும். தினமும் கழுத்துக்குப் பயிற்சி எடுத்துக்கொள்வது அவசியம்.

கழுத்துக்கு உடற்பயிற்சி செய்யும் போது நன்கு நேராக நிமிர்ந்து தாடை, தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதிகளை நேரான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நாம் படுக்கையில் படுத்தபடி டி. வி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், சரியான உடல் எடையைக் கண்காணிப்பது அவசியம். தொடர்ந்து வலி இருக்கும்பட்சத்தில் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறாவேண்டியது மிகவும் அவசியம். 

ஏ.டி.சி.முருகேசன், ஸ்ரீஓம் பிசியோதெரபி கிளினிக்,

பாரதி நகர், விருதுநகர். செல்போன் : 9994279960

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்