நீண்ட நாட்களாக மலச்சிக்கல்களால் அல்லல்பட்டு வருபவர்களுக்கு சிறந்த மருந்து செந்நாயுருவி இலை!

நீண்ட நாட்களாக மலச்சிக்கல்களால் அல்லல்பட்டு வருபவர்களுக்கு சிறந்த மருந்து செந்நாயுருவி இலை!

பல்துலக்கியாக நாயுருவி வேரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேரால் பல் துலக்கினால், பற்கள் கறைகள் நீங்கி வெண்மையாவதுடன், பாக்டீரியா போன்ற கிருமிகளும் ஒழிந்துவிடும். கடுமையான பல்வலி இருப்பவர்கள் மிருதுவான நாயுருவி வேருடன், சிறிது கடுகு எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், வலி பறந்தோடிவிடும்.

தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) இதில் பல் துலக்கினால் முகம் பிரகாசமடையும். பேச்சு தெளிவாகும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்து அகலும். ஆனால், இந்த நாட்களில் டீ, காபி, புகை, புலால் கூடாது என்கிறது’ சித்த மருத்துவம்.

சிறுநீர் சிக்கலுக்கும் செலவில்லாதத் தீர்வு நாயுருவி. கதிர்விடாத இளம்செடியின் இலையை இடித்து சம அளவு நீர் கலந்து காய்ச்சி… 3 மில்லி அளவு தினமும் மூன்றுவேளை குடித்து, அத்துடன் பால் அருந்தி வந்தால் தடைபட்ட சிறுநீர் பிரியும். சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படும்.

நீண்ட நாட்களாக மலச்சிக்கல்களால் அல்லல்பட்டு வருபவர்கள், செந்நாயுருவி இலைகளை நீரில் நன்கு கொதிக்கவைத்து, குடிநீராக பருகிவர, எத்தகைய நாள்பட்ட மலச்சிக்கலும் நீங்கி, உடனே பேதியாகி வெளியேறும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்