புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டதும், மூலத்துக்கு மருந்தாக பயன்படுவதும், முகப்பருவை மறைய செய்வதும், ரத்த கசிவை போக்க கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதுமானது மாசிக்காய். மாசிக்காயை பயன்படுத்தி முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
மாசிக்காய் பொடி, சாதிக்காய் பொடி, எலுமிச்சம் பழம்.சிறிதளவு மாசிக்காய் பொடியுடன் சிறிது சாதிக்காய் பொடி, சிறிது எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை இரவு நேரத்தில் முகப்பருவின் மீது பூசவும். பின்னர், காலையில் முகம் கழுவினால் முகப்பரு மறையும்.
புண்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை பெற்றது. மாசிக்காயை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் மாசிக்காய் பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ரத்தமூலம் இருப்பவர்கள், மாதவிலக்கு சமயத்தில் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். வாய் புண் தொண்டை புண் குணமாகிறது.