எளிதில் கிடைக்கக்கூடிய விதைகள் நிறைந்த கொய்யா பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

எளிதில் கிடைக்கக்கூடிய விதைகள் நிறைந்த கொய்யா பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

கொய்யாவானது அவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் மூலமாகவும் மற்றும் குறைந்த கிளைச்மிக் (Glycemic Index) குறியீடு காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகளைத் தடுக்கின்றன. குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.

மற்ற பழங்களுடன் கொய்யாவினை ஒப்பிடும் போது நார்ச்சத்துக்கு ஆதாரமாக விளங்கும் பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் நார்ச்சத்தின் அளவில் 12 சதவீதத்தை ஒரு கொய்யாப் பழம் பூர்த்தி செய்கிறது. இவ்வாறு உடலில் சேரும் நார்ச்சத்து உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலனைத் தருகிறது. உண்ணும் போது கொய்யாவின் விதைகள் முழுமையாகவோ அல்லது மென்று உண்டால் ஆரோக்கியமான மலம் வெளியேற்ற இயக்கத்தை உருவாக்க உதவுகிறது.

கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி‍ 9’ அல்லது போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?