உங்கள் குழந்தைகளுக்கு கடலை உருண்டையை கொடுங்க! அவ்ளோ சத்துக்கள் இருக்கு!

உங்கள் குழந்தைகளுக்கு கடலை உருண்டையை கொடுங்க! அவ்ளோ சத்துக்கள் இருக்கு!

பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும் பொழுது கடலை கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்துவிடும். அதுமட்டுமல்ல கடலையும் வெல்லமும் சேர்ந்து புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல சத்துக்களை கொண்ட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உருப்பெறுகிறது.

பொதுவாக கடலை மிட்டாயில் சேர்க்கப்படும் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட் நார்ச் சத்தும் கரையும் நல்ல கொழுப்பு

 * புரோட்டீன்  * வைட்டமின்கள்  * இரும்புச்சத்து  * கால்சியம்  * துத்தநாகம்  * மாங்கனீஸ்  * பாஸ்பரஸ் * பொட்டாசியம்  *மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

அதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது.  மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.

எனவே கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். அதேபோன்று நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.  இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட் போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.

குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம். முக்கியமாக நிலக்கடலையில் உள்ள சக்திகள் ஆண்கள் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது. அந்த வகையில் இந்த கடலை மிட்டாய் அனைவருக்குமே மிகவும் சிறந்தது.

அதேபோல் நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை. செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்