ஒரு ஆவாரம் பூ செடியை வீட்டில் வையுங்க, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் இத்தனை நன்மைகள் தரும்!

ஒரு ஆவாரம் பூ செடியை வீட்டில் வையுங்க, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் இத்தனை நன்மைகள் தரும்!

ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி மினுமினுப்பாகவும், பளபளப்பாகும்.
ஆவாரம்பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம்.

ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண்நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

அசோகமட்டை, மருதம்பட்டை, ஆவாரம் பூ , திரிகடுகு பொடி, திரிபலா பொடி அனைத்தையும் சமஅளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி உடனே சரியாகிவிடும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?