இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கணும்னா மரவள்ளி கிழங்கு சாப்பிடணும்! ஏன்?

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கணும்னா மரவள்ளி கிழங்கு சாப்பிடணும்! ஏன்?

மரவள்ளியானது அதிகளவு கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் உடல் எடையினை அதிகரிக்க விரும்புவோர் இக்கிழங்கினை உண்டு பயன் பெறலாம். மரவள்ளியில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் கே ஆகியவை எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே இக்கிழங்கினை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பெறலாம்.

இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று கூறப்படுகிறது.

மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி உடலினை இக்கிழங்கின் நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே இக்கிழங்கினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்