ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் இவ்வளவு அதிகரித்ததா?

ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் இவ்வளவு அதிகரித்ததா?

மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மார்ச் 11ஆம் தேதியிலிருந்து தங்கம் விலை குறைக்கப்பட்டு வந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மார்ச் 10 ஆம் தேதி அதிர்ச்சியடையும் அளவுக்கு ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 35,000 ஐ தாண்டியது. மார்ச் 11 ஆம் தேதியிலிருந்து நேற்று வரை தங்கம் விலை ரூ. 2,392/- குறைந்திருந்தது. இன்று மீண்டும் ரூ.592/- அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி தூய தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4,073 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 32,584 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,879/- ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 31,032 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584/- அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,952/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 31,616/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592/- அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,147/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 33,176/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

20.3.2020 – 1 grm – Rs. 4,147/-, 8 grm – 33, 176/- ( 24 கேரட்)

20.3.2020 – 1 grm – Rs. 3,952/-, 8 grm – 31,616/- (22 கேரட்)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 40.20 ஆகவும், கிலோவுக்கு ரூ.40,200/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்