ஆனால் மார்ச் 2 ஆம் தேதியிலிருந்து மீண்டும் தங்கம் விலை ஏறத்தொடங்கியுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி ஒரே நாளில் தூய தங்கத்தின் விலை ரூ. 1080/- உயர்த்தப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. இதே போல வெள்ளி விலையும் அன்று கிலோவுக்கு ரூ. 1,600/- அதிகரித்தது.
நேற்று தங்கம் விலையில் சிறிது சரிவு ஏற்பட்டது. ஆனால் மீண்டும் இன்று சவரனுக்கு ரூ. 824/- அதிகரித்து தங்கம் விலை ரூ. 35,000/- ஐ தாண்டிவிட்டது.
நேற்றைய நிலவரப்படி தூய தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4328 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 34,624 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.4,122/- ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 32,976 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.784/- அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,220/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 33,760/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.824/- அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,431/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 35,448/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:
6.3.2020 – 1 grm – Rs. 4,431/-, 8 grm – 35, 448/- ( 24 கேரட்)
6.3.2020 – 1 grm – Rs. 4,220/-, 8 grm – 33,760/- (22 கேரட்)
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 50.40 ஆகவும், கிலோவுக்கு ரூ.50,400/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..