5 முறை அடுத்தடுத்து தோல்வி! மனம் தளரா முயற்சி! 6வது முறையில் சாதித்த விழுப்புரம் சித்ரா!

5 முறை அடுத்தடுத்து தோல்வி! மனம் தளரா முயற்சி! 6வது முறையில் சாதித்த விழுப்புரம் சித்ரா!

தந்தை ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் குடும்பத் தலைவி. சாதாரணக் குடும்பம்தான் என்ற போதும் தனது லட்சியம் விடா முயற்சிக்கு தனது குடும்பம் துணை நின்றதாகக் கூறுகிறார் சித்ரா.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே படிப்பைத் தொடர்ந்ததாகக் கூறும் அவர் வேலை முடிந்து வந்து தினமும் 5 மணி நேரம் படித்ததாகக் கூறும் சித்ரா தனியார் நிறுவனம் என்பதால் தேர்வு சமயத்தில் படிக்கவும், தேர்வு எழுதவும் தொடர்ச்சியான விடுமுறை கிடைக்காது என்பதால் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு சமயத்தில் வேலையை விட்டுவிட்டு வென்றுவிடும் நம்பிக்கையும் படிக்கத் தொடங்கியதாக தெரிவிக்கிறார். 

முதல் முறை தேர்வு எழுதிய போது புரிதலும் வழிகாட்டுதலும் இன்றி எழுதி தோல்வி அடைந்ததாகவும், அதன் மூலம் புரிதலை வளர்த்துக்கொண்டதாகவும் கூறுகிறார். இரண்டாவது முறை 15 மதிப்பெண்களிலும், 3-வது முறை 3 மதிப்பெண்களிலும் வெற்றியை இழந்ததாகக் கூறும் சித்ரா, அடுத்தடுத்த தேர்வுகளில் மெயின் மற்றும் நேர்முகத்தேர்வுகளில் வாய்ப்பைத் தொலைத்ததாக தெரிவிக்கிறார். 

எனினும் வென்றே தீர வேண்டும் என்ற உறுதி இருந்ததால் பாஸ் ஆகவில்லை என தெரியும் அடுத்த நிமிடத்தில் இருந்து அடுத்த ஆண்டூத் தேர்வுக்கு படிக்கத் தொடங்கியதாகவும், அந்த நம்பிக்கைதான் ஆறாவது முயற்சியில் தனக்கான வாய்ப்பை வசப்படுத்தியதாகவும் சித்ரா கூறுகிறார்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்