11 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை | 11 Month Baby Food Chart in Tamil

11 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

யாருடைய துணையும் இல்லாமல் தானாகவே குழந்தைகள் நிற்பார்கள். சில குழந்தைகள் சோஃபா, கட்டில், சேர் போன்றவற்றின் துணையால் எழுந்து நிற்பார்கள். இந்த மாதத்தில், வீட்டில் உள்ள மற்றவர்கள் உண்ணும் உணவைத் தானும் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். இது நல்ல செய்தி தானே? ஆம்… உங்கள் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது குழந்தைக்கென நீங்கள் தனியாக உணவுத் தயாரிக்க வேண்டாம். கூழ், கஞ்சி என செய்ய தேவையில்லை. நீங்கள் உட்கார்ந்து சாப்பிடும்போது குழந்தையையும் அருகில் உட்கார வைத்து சாப்பிட வைக்கலாம். இதனால் குழந்தைகளும் தானாக சாப்பிடுவதற்கு பழகுவார்கள்.

ஆனால், சில குழந்தைகளுக்கு இன்னும் மசித்த உணவுகளின் தேவை இருக்கலாம். காரமும் குறைவாக சாப்பிடும் பழக்கத்தில் இருக்கலாம். மசாலாவும் குறைந்த அளவில் இருக்கும்படியும் இருக்கலாம். பரவாயில்லை… கவலை வேண்டாம். இதுவரை குழந்தை ஆரோக்கியமாக, வளர்ந்து கொண்டிருக்கிறதே. அதுவே போதும். இந்த குழந்தைகளும் இன்னும் பழக பழக பெரியவர்கள் போல சாப்பிடும் நிலைக்கு வந்து விடுவார்கள்.

இந்த 11-வது மாதத்தில் அனைத்து உணவுகளையும் குழந்தைகள் சுவைத்து இருப்பார்கள். புதிய உணவுகள் எனப் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். எனினும், குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை கொஞ்சம் தள்ளியே வையுங்கள்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

  • இன்னமும் நீங்கள் ஃபிங்கர் ஃபுட்ஸ் தரலாம். இதனால் கைகளில் பிடித்து சாப்பிடும் பழக்கத்தில் குழந்தைகள் ஈடுபடுவார்கள்.
  • தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் கொடுக்கலாம். குழந்தையின் தேவையின் பொறுத்து இதை நீங்கள் தரலாம்.
  • செயற்கை இனிப்புகள் கொண்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், பாலிஷ் செய்யப்பட்ட கோதுமை மாவால் தயாரித்த உணவுகள், பிஸ்கெட் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
  • குழந்தைக்கு தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் கொடுங்கள்.
  • குழந்தை கஷ்டப்பட்டு மலம் கழித்தாலோ, வெதுவெதுப்பான தண்ணீரை கூடுதலாக கொடுக்கலாம்.
  • பிளாஸ்டிக் பாட்டில் இல்லாத சிப் செய்கின்ற பாட்டில் இருந்தால், அதில் தண்ணீர் ஊற்றிக் கொடுக்கலாம்.
  • பாக்கெட் ஜூஸ் கட்டாயம் தவிருங்கள். ஃபிரெஷ் ஜூஸ் கொடுக்கலாம்.
  • காலை 11.30 அல்லது மாலை 4 மணிக்கு ஃப்ரெஷ் ஜூஸ் தரலாம்.
  • குழந்தையை டைனிங் டேபிளில் உட்கார வைத்து உணவுக் கொடுங்கள். இது நாளடைவில் குழந்தைக்கு பழக்கமாகும்.

குழந்தைக்கு எந்தெந்த இந்திய மசாலா உணவுகளைத் தரலாம்?

குழந்தையின் உணவுகளில் சிறிதளவில் இதையெல்லாம் நீங்கள் சேர்க்கலாம். இவையெல்லாம் இந்திய மூலிகைகள்தான்.

  • பூண்டு
  • மிளகு
  • துளசி
  • இஞ்சி
  • பட்டை
  • ஜாதிக்காய்
  • புதினா
  • கறிவேப்பிலை பொடி

இவற்றை சேர்த்து சமைத்த உணவுகளை கொஞ்சமாக குழந்தைகளுக்கும் கொடுங்கள். அலர்ஜி ஏற்படாது. எனினும் கவனியுங்கள்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

11 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை

குழந்தைக்கு ஒரு வயது ஆனவுடன், திட உணவுகளை அவர்கள் நன்கு பழகி இருப்பார்கள். அதற்கு இந்த 11-வது மாதம் பெரிதாக உதவும்.

இந்த 11, 12 மாதங்களில் நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பழக்கிவிடுங்கள். இதனால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். மகிழ்ச்சியான உணர்வுடன் இருப்பார்கள்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான கேரட் – டேட்ஸ் கீர்  ரெசிபி

11 மாத குழந்தைகளுக்கான உணவு வகைகள்

வெஜ் உப்புமா

Image Source : Hungry Forever

தேவையானவை

  • ரவா – ½ கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • நறுக்கிய கேரட், பட்டாணி, பீன்ஸ், குடமிளகாய் – ¼ கப்
  • துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • நெய் – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – 1 ½ கப்

செய்முறை

  • நறுக்கிய காய்கறிகளை சிறிது தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளுங்கள்.
  • தவாவில் எண்ணெய் நெய் விட்டு சீரகத்தைப் பொரிக்க விடுங்கள். பிறகு வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • மஞ்சள் தூள் சேர்த்து, வேகவைத்த காய்கறிகளையும் சேர்க்கவும்.
  • சுடுநீரை இதில் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் ரவாவை கலக்கவும். கட்டிகள் இல்லாமல் இருக்க கைவிடாமல் கலக்குங்கள்.
  • மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே மிதமான தீயில் வேக வையுங்கள்.
  • மூடியைத் திறந்து, ரவா உப்புமா வெந்துவிட்டதா என சரி பார்த்தபின் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
  • இளஞ்சூடாக குழந்தைக்கு கொடுக்கலாம்.

இதையும் படிக்க : 7 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை (Food Chart for 7 month Babies)

சர்க்கரைவள்ளிகிழங்கு ஃப்ரெஞ்ச் டோஸ்ட்

Image Source : Todays Parent

தேவையானவை

  • சர்க்கரைவள்ளிகிழங்கு – 2
  • முட்டை மஞ்சள் கரு – 2
  • மிளகு தூள் – 1 சிட்டிகை

செய்முறை

  • சர்க்கரைவள்ளி கிழங்கை தோல் உரித்து, நீட்டாக அறிந்து கொள்ளவும்.
  • நீரில் போட்டு வேக வைக்கவும்.
  • முட்டை மஞ்சள் கருவுடன், மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • வெந்த சர்க்கரைவள்ளி கிழங்கு துண்டுகளை முட்டையில் துவைத்து எண்ணெயில் பொரித்து எடுங்கள்.

இதையும் படிக்க : 8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை (Food Chart for 8 Month Babies)

ஆப்பிள் பான்கேக்

Image Source : Momtastic

தேவையானவை

  • ஆப்பிள் – 1
  • கோதுமை மாவு – ½ கப்
  • பேக்கிங் சோடா – ½ டீஸ்பூன்
  • இளஞ்சூடான தண்ணீர் – ½ கப்
  • ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்
  • பட்டைத் தூள் – ¼ டீஸ்பூன்
  • நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

  • ஆப்பிளைக் கழுவி தோல் நீக்கி கொள்ளுங்கள். துருவிக் கொள்ளுங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா, பட்டைத் தூள் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பவுலில் வெதுவெதுப்பான தண்ணீரும் உருக்கிய நெய்யையும் ஊற்றி கலக்கவும்.
  • பிறகு, இதில் கலந்து வைத்துள்ள கோதுமை மாவை சேர்க்கவும். இதனுடன் துருவிய ஆப்பிளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  • மாவு சரியான பதத்துக்கு வரவில்லை என்றால் தேவையான தண்ணீரை சேர்க்கலாம்.
  • தவாவை சூடேற்றி சின்ன சின்ன பான்கேக்காக ஊற்றுங்கள்.
  • இருபுறமும் நெய்விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கலாம்.
  • இளஞ்சூடாக குழந்தைக்கு கொடுக்கவும்.

இதையும் படிக்க : 9 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை (Food Chart for 9 months Babies)

கொண்டைக்கடலை பட்டீஸ்

Image Source : Pinterest

தேவையானவை

  • வேகவைத்த கொண்டைக்கடலை – 2 கப்
  • வெங்காயம் – 1
  • கொத்தமல்லி – ½ டீஸ்பூன்
  • கோதுமை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய் – 2-3 டீஸ்பூன்

செய்முறை

  • வேகவைத்த கொண்டைக்கடலையை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
  • அதில், வெங்காயம், கொத்தமல்லி, கோதுமை மாவு சேர்த்து கலக்கவும்.
  • மாவாக கிடைத்ததும், சின்ன சின்ன பட்டீஸாக திரட்டிக் கொள்ளவும்.
  • தவாவில் இருபுறமும் ஆலிவ் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

இதையும் படிக்க : 10-வது மாதத்தில் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? (Food chart for 10 month Babies)

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…