·
வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் (பி9) குடும்பத்தைச் சேர்ந்த நீரில் கரையக்கூடிய வைட்டமின்தான் ஃபோலிக் அமிலம்.
·
இது ஃபோலோட்டாக இயற்கை காய்கறிகள், கீரைகள், பருப்பு, முழு தானியங்களில் கிடைக்கிறது. ஆனால் இது நீரில் கரையக்கூடியது என்பதால் நம் உடலால் இதனை சேமித்து வைக்கமுடியாது.
·
அதனால் சத்து மாத்திரையாக ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஃபோலிக் அமிலம் ரத்த செல்கள் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது.
·
ஆர்.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ. போன்ற மரபியல் பாதிப்புகளைத் தவிர்க்கவும் ஃபோலிக் அமிலம் உதவி செய்கிறது.
கர்ப்பிணிகள் மட்டும்தான் ஃபோலிக் மாத்திரை சாப்பிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. திருமணத்திற்கு பெண்கள் தயாராகும்போதே ஃபோலிக் அமில மாத்திரைகள் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. திருமணம் முடிந்ததும் பெண் மட்டுமின்றி ஆணும் ஃபோலிக் மாத்திரை சாப்பிடுவது நல்லது. ஃபோலிக் மாத்திரையின் நன்மைகளை நாளையும் காணலாம்.