தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாமல் படுக்கையில் இருப்பவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாமல் படுக்கையில் இருப்பவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

அப்படி இருந்தால்தான் அந்த தாம்பத்ய உறவு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். அது இல்லையென்றால் தேவையற்ற மன அழுத்தம் கவலைகளையும், நோய்களையும் ஏற்படுத்தும். 

ROCD என்பது Relationship Obsessive Disorder. அப்செசிவ் டிஸ் ஆர்டர் மனநிலை இருப்பவர்கள் எதையும் கட்டாயம் அதுவும் உடனடியாக செய்து விட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள். அடிக்கடி உடைமைகளை சரி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு உடலுறவில் இருக்கும் போது சில கட்டாய நடவடிக்கைகளால் பிரச்சனைகள் வரும்.

இந்த டிஸ் ஆர்டரால் பாதிக்கப்பட்டவருக்கு அடிக்கடி சந்தேகங்கள் வரும். சில சமயங்களில் சந்தேகங்கள் வெறி பிடித்த அளவில் கூட மாறிவிடும. தன்னை தன் துணை விரும்பி உடலுறவுல் ஈடுபடுகிறதாக அல்லது வெறுப்பாக ஈடுபடுகிறதாக என்ற சந்தேகம் அவர்களுக்கு வரும். வட கரோலினா பல்கலைக்கழகத்தின் மருத்துவ உளவியலாளர் கூறுகையில் ஓ.சி.டி உள்ளவர்கள் தங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி வெறித்தனமான எண்ணங்களைக் கொண்டுள்ளனர்.

இதனால் உறவில் அன்றாட சந்தேகங்கள் அதிகரிக்கிறது, நிச்சயமற்ற தன்மை, சகிப்புத்தன்மை இன்றி போய் விடுகிறது. அதிக மன அழுத்தம் கொண்டவர்கள் தங்கள் துணையை கவனிக்காமல் விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அன்பு பாராட்டுவதில் சிரமம் ஏற்படும். உறவை பற்றி சிந்திப்பது கடினமாக இருக்கும். தங்கள் துணையை இழக்கவும் முடியாமல் உறவை நல்வழியில் செலுத்தவும் முடியாமல் பிரச்சனை ஏற்பட்டு அவதிப்படுவார்கள். சில பேருக்கு ஓ. சி. டி ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தும் மனப் போக்கு வந்து விடும்.இதனால் உறவில் தங்கள் துணையை கட்டுப்படுத்துவது, அவர்களின் சிந்தனைகளை கட்டுப்படுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டு உறவை சீர்குலைத்து கொள்வார்கள். 

உதாரணமாக ஒருவர் 35 வயதான பெண்ணை சந்தோஷமாக திருமணம் செய்து கொள்கிறார். தன்னுடைய மனைவி அழகானவள், அறிவானவள் என்று நினைக்கிறார். ஆனால் அப்படி நினைப்பதோடு நிறுத்தாமல் ஒவ்வொரு பெண்களையும் பார்க்கும் போது தன்னுடைய மனைவியை அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க்கிறார். தன் மனைவி மற்றவர்களை விட அழகானவளா என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த எண்ணம் அவர்களைப் போலவே தன் மனைவி இருக்க வேண்டும் என்ற ஆசையினால் மனைவியின் சுதந்திரத்தை பறிப்பவர்கள் உண்டு.

அதாவது ஒரு பெண்ணுக்கு ஒரு அழகான பையன் கிடக்கிறான். இருவரும் காதலித்து வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ள நினைக்கும்போது அடிக்கடி நம்முள் சண்டை வருவதால் திருமண பந்தம் சரியாக இருக்குமா என மறுபடியும் அலசி அலசி பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி ROCD பிரச்சனை இருப்பவர்கள் ஒரு முழுமையான 100% ரிலேஸன்ஷிப்பை தேடிக் கொண்டே இருப்பார்கள். அதை நினைத்து கவலை கொண்டே இருப்பார்கள்.

ROCD இருப்பவர்கள் புத்தியுடன் சிந்திப்பதில்லை.தேவையற்ற எண்ணங்களும் சந்தேகங்களும் அவரை இப்படி செய்ய வைக்கிறது. தன்னுடைய துணை இன்னமும் அந்த பெண்ணை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உண்டு பண்ணுகிறது என்கிறார் ஒரு மருத்துவர்.

இந்த ROCD பிரச்சனையை எளிதாக சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம். உங்களுடைய நம்பிக்கையின் மூலம் முதலில் பயத்தை விட வேண்டும். இதன் மூலம் உறவில் ஏற்படும் தேவையற்ற சந்தேகங்கள், சிந்தனைகளை சரி செய்து விடலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்