வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஷியல் டிப்ஸ்! இதை படிங்க இனிமே நீங்க தான் அழகி!

வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஷியல் டிப்ஸ்! இதை படிங்க இனிமே நீங்க தான் அழகி!

இவைகளில் அனைத்தையுமே மாற்றி
மாற்றி பயன்படுத்திவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  

உலர்ந்த சருமத்திற்கு பாதாம்
எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது. பருக்களால் உருவான குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில்
நாளடைவில் நீக்கிவிடும்.ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோல் 3 – 5 எடுத்து தண்ணீர்
சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.*

கடைகளில் பச்சை நிற ஆப்பிள்
விற்பனை செய்யப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். இந்த பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல்
சுருக்கம், அரிப்பு, வெடிப்பு போன்ற அனைத்திற்கும் மிக நல்லது.

நம் தமிழர்களின் அழகுக் குறிப்பு
இதுதான். ஆம், கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள்
காணாமல் போய்விடும்.பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால்
நிறம் கூடும்.

தேனில் பால்,தயிர்,அரைத்த எள்ளு
எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,மிருதுவாகவும் ஆகும்.

கடலெண்ணெயில் எலுமிச்சை சாறு
கலந்து தேய்த்து வந்தால் பரு,கரும்புள்ளிகள் வரவே வராது.

அதேபோல் பரு, கரும்புள்ளி அல்லது வெடிப்பு உள்ள முகத்திற்கு பாலில், எலுமிச்சம்
சாறு பிழிந்து, கலந்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்