பேஸ்புக் பிரபலம் கமலி பன்னீர் செல்வம் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது, பதிமூன்று வயதில் பார்க்கும் ஆண்கள் அனைவரும் பரவசப்படுத்த, பின் மெல்ல ரவிசாஸ்திரி போதும் என மனம் நிறுத்தி கொண்டது. விஜில் சோப்பை மெல்லிய சிரிப்புடன் திலீப் வெங்ஸசர்கார் அறிமுகப்படுத்தும்போது அந்த இளம் மீசையும், சிரித்த கண்களும் ரவி சாஸ்திரி மீதான காதலை அப்புறப்படுத்தியது.
பதினைந்து வயதில் சினிமா பார்க்க ஆரம்பிக்க கமலும், மைக் மோகனும் சேர்ந்தே ஈர்க்க,, அவர்களுடன் டூயட் பாட முடிவு செய்த கணத்தில் டிவியில் முகம் காட்டிய ஹிந்தி நடிகர்களும் மனதை அசைத்து பார்க்க, நடிகர்களுக்கு போட்டி அதிகமாக இருப்பது தெரிய பிஞ்சு மனம் உடைந்து போனது.
உடைந்து போன மனதை டென்னிஸ் ப்ளேயர் அகாஸி ஒட்டவைத்து காதல் துயரை துடைத்தபோது, ஒரளவு வெளிநாட்டு ஆட்களுக்கு நம்மூரில் போட்டியில்லை என மனம் ஆசுவாசமடைந்தது.
சினிமா ஆட்களே வேண்டாம் என முடிவெடுக்க நினைத்தபோது அந்த முடிவை அரவிந்சாமி லேசாக அசைத்துபார்க்க, இடைவெளியில் அஜீத்தும் புகுந்துகொள்ள முடிவை ஒத்தி வைக்க வேண்டியதாகியது.
அனைத்து காதலும் முடிந்துவிட்டது என நினைத்து கதவை மூட எத்தனிக்கும் போது விஜய் தேவரகொண்டா வந்து கையாட்டுகிறார்.. என்னே ஒரு கொடுமையானது இந்த காதல்.. ச்சே..
ஒருத்தரை மட்டும் காதலிக்கும் ராம்களும், ராமிகளும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் 😉 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.