கருப்பு திராட்சை பற்றி நீங்கள் அறிந்தால், தினமும் இதை சாப்பிட தொடங்கிடுவீர்கள்!

கருப்பு திராட்சை பற்றி நீங்கள் அறிந்தால், தினமும் இதை சாப்பிட தொடங்கிடுவீர்கள்!

திராட்சை விதை சாறனது உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.

திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப் பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு. இந்த புரோ ஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது.

பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

கருப்பு திராட்சை முதுமையில் தாக்கும் அல்சைமர் நோயில் இருந்து பாதுகாக்கும். இதற்கு இதில் உள்ள பாலிஃபீனால்கள் தான் காரணம். மேலும் கருப்பு திராட்சை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நரம்பு செல்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

கருப்பு திராட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் ஒரு கையளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ‘Pterpstilbene’ என்னும் உட்பொருள், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்