சுலபமாக வளரக்கூடிய பிரண்டை செடியின் அதீத மருத்துவ பயன்கள்!

சுலபமாக வளரக்கூடிய பிரண்டை செடியின் அதீத மருத்துவ பயன்கள்!

பிரண்டை உடலில் தங்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. பிரண்டையை பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் பிரண்டையை இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து நரம்புகள், ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைத்து, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு நன்கு ரத்தம் பாயச் செய்து இதய நலனை பாதுகாக்கிறது

எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொழுப்பு சத்தை கரைப்பதுடன் ஒவ்வாமைக்கு மருந்தாகிறது. அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும்

வயிற்றில் வாயு கோளாறு ஏற்பட்டு அவதியுறுபவர்கள் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகள் போன்றவை நீங்கும். குடலில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது. பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்களையும், ஜுரம் போன்றவையும் ஏற்படாமல் தடுக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு.

பிரண்டை தண்டுகளை நன்கு பக்குவப்படுத்தி சாப்பிடும் போது உடலுக்கு சிறந்த பலத்தை தருகிறது. பிரண்டையில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல இருக்கிறது. இதை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல உற்சாகத்தையும், சுறுசுறுப்பு தன்மையையும் கொடுக்கிறது

பிரண்டை தண்டுகளை நன்கு அரைத்து அதிலிருந்து எடுக்கப்படும் சாறுகளை ஆஸ்த்மா மற்றும் இன்ன பிற நுரையீரல் சம்பந்தமான நோய்களாலால் அவதியுறுபவர்கள் அருந்தி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்யில் தங்கியிருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றும்.

அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?