ஒரு கிலோ ரூ.200 தான் ! சந்தையில் சுடச்சுட விற்பனையாகும் எலிக்கறி!

ஒரு கிலோ ரூ.200 தான் ! சந்தையில் சுடச்சுட விற்பனையாகும் எலிக்கறி!

   கோழிக்கறி,
ஆட்டுக்கறி, மாட்டுக் கறிக்கு போட்டியாக எலிக்கறி மக்களை பெரிதும் கவர்ந்து
வருகிறது. எலிக்கறி பிரபலமாக இருப்பது சீனாவிலோ, தாய்லாந்திலோ இல்லை. இந்தியாவின்
அசாம் மாநிலத்தில் தான். அதுவும் கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறிக்கு இணையாக
எலிக்கறியை வாங்கிச் சென்று சமைத்து சாப்பிட அம்மாநில மக்கள் மிகவும் ஆர்வம்
காட்டி வருகின்றனர்.

   எலிக்கறிக்கு என்றே பிரத்யேக சந்தை ஒன்றும்
அசாமில் செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் குமரிக்கட்டா எனும் கிராமம் தான்
எலிக்கறிக்கு பிரபலமானது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள்
நிலத்தில் உள்ள எலிகளை வேட்டையாடி கொண்டு வந்த இந்த கிராமத்தில் தான் விற்பனை
செய்கின்றனர். எலிக்கறியிலேயே விதவிதமான வகைகள் இங்கு உள்ளன.

   எலியை பிடித்து உயிரோடு கொண்டு வந்தால் அதற்கு
தனி ரேட். இதே போல் எலியின் தோலை உரித்து கொண்டு வந்தால் அதற்கு ஒரு ரேட். மேலும்
எலியை பிடித்து வேக வைத்து கொண்டு வந்து விற்பனை செய்தால் அதற்கும் ஒரு ரேட். இந்த
மூன்று விதமான எலிக்கறியில் மக்கள் அ திகம் விரும்பி வாங்கிச் செல்வது உயிரோடு
இருக்கும் எலிக்கறியை தான்.

   உயிருடன் கொண்டு வரப்படும் எலிகள் ஒரு கிலோ
200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எலிகளை பாதி மயக்கத்திற்கு கொண்டு சென்று தராசில்
வைத்து நிறுத்து சுடச்சுட விற்பனை செய்கிறார்கள். சிலர் உயிருடன் எலிகள் வரும்
என்கிற நம்பிக்கையில் சந்தையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். விவசாய
நிலத்தை பாழ்படுத்தும் எலிகளை கொன்றதோடு மட்டும் அல்லாமல் அதற்கு நல்ல விலையும்
கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்