முகத்தில் மினுமினுப்பு பெற கிரீம்கள் எதற்கு? பழங்காலத்து முறை மஞ்சள் ஆவி பற்றி தெரியாத?

முகத்தில் மினுமினுப்பு பெற கிரீம்கள் எதற்கு? பழங்காலத்து முறை மஞ்சள் ஆவி பற்றி தெரியாத?

பொதுவாக மஞ்சள் கிழங்கை பச்சையாகவோ அல்லது வேகவைத்து அரைத்தோ முகத்துக்குப் பூசினால் அழகு கூடும் என்பது நமக்குத் தெரியும். மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள்.

அப்படி கொதிக்க தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கலந்து கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்கிற தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும். 

இந்த ஆவி பிடிக்கிற தண்ணீருக்குள் வெறுமனே மஞ்சள் கிழங்கு மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனுடன் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகளையும் போட்டுக் கொள்ளலாம்.

ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள். ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகியிருக்கும். எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம்.

ஆவி பிடித்து முடித்த பின்பு, துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும்.
ஆவி பிடித்த பின்னர்,

நம்முடைய முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது அவசியம். அதன்பின் ஏதாவது ஒரு பேஸ்பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்