வைரஸ்க்கு உயிர் உள்ளதா என்ற கேள்விக்கு போவதற்கு முன் உயிர் என்றால் என்ன ?
நான் வகுப்பெடுக்கும்போது எனது மாணவியிடம் கேட்டிருக்கிறேன் உனக்கு உயிர் இருக்கிறதா ? என்று.. ஆம் என்றார் அவர்
எப்படி கூறுகிறாய் ?
ஏனென்றால் நான் பேசுகிறேன் நான் நடக்கிறேன் நான் சாப்பிடுகிறேன் என்றார் அவர்
அப்படியெனில் தாவரங்கள் நடப்பதில்லை பேசுவதும் இல்லை அவற்றறிக்கு உயிர் இல்லையா என்றேன், அவர் யோசிக்க ஆரம்பித்தார்
உண்மையில் உயிர் என்றால் என்ன? ஒருவருக்கு கேன்சர் உள்ளது என வைத்துக்கொள்வோம்
அவரது கேன்சர் செல்லை அறுவை சிகிச்சைமூலம் அகற்றி அந்த கேன்சர் செல்லை ஆய்வகத்தில் ஒரு வளர்ஊடகத்தில் வைத்து வளர்க்க முடியும் அப்படி வளர்க்கும்போது அது பல்கிபெருகி வளந்துகொண்டிருக்கிறது
அதே நேரத்தில் அந்த கேன்சர் நோயாளி இறந்து விட்டார்
இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?
ஏனென்றால் அவர் இறந்துவிட்டாலும் அவருடைய செல்கள் ஆய்வகத்தில் இன்றும் உயிருடன் பல்கிபெருகிக்கொன்டுதான் இருக்கிறது அல்லவா?
நமது உடலில் ட்ரில்லியன் கணக்கில் செல்கள் இருந்தாலும் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு உயிர்தான்
ஏனென்றால் ஒவ்வொரு செல்லும் சுவாசிக்கிறது, வளர்சிதை மாற்றம் அடைகிறது இறக்கவும் செய்கிறது?
ஆனாலும் நாம் தனித்தனி உயிரியாக கருதுவதில்லை எல்லா செல்களும் இனைந்து தம்மை ஒரே உயிரியாக எப்படி கருதிக்கொள்கிறது? என்ற கேள்விகளுக்கு விடை ஏதும் இல்லை
உன்மையில் உயிர் என்றால் என்னவென்றே நமக்கு சரிவரத்தெரியாது, ஆனால் உயிரினங்கள் அனைத்தும் சில குறிப்பிட்ட பண்புகளை பெற்றிருக்கும் அந்த பண்புகளை பெற்று இருந்தால் மட்டுமே அவற்றை உயிர் என வரையறுக்க முடியும்
அவை என்னவென்றால்
1) சுவாசித்தல்
2) வளர்ச்சியடைதல் ( வளர் சிதை மாற்றம் )
3) இனப்பெருக்கம் செய்தல்
எல்லா உயிரினங்களும் சுவாசிக்கும் வளர்ச்சி அடையும் இனப்பெருக்கம் செய்யும்
சரி வைரஸ்க்கு உயிர் உள்ளதா என்றால் அறிவியலாளர்கள் இருக்கு ஆனா இல்லை என்றே பதில் அளிக்கிறார்கள் ஏன் –
ஏனேன்றால் வைரஸ் சுவாசிப்பதில்லை
அவை சுவாசிக்கவில்லை எனவே அவற்றிக்கு உயிர் இல்லை என கூறலாம் என்றால் வைரஸ் இனப்பெருக்கம் செய்கிறது ஆனா அப்படி இனப்பெருக்கம் செய்ய இன்னொரு உயிரி வேனும் அதை ஓம்புயிரி (host) என்பார்கள்..
இரண்டாவதாக உயிரினங்களின் அடிப்படை அலகு செல் என படித்திருப்பீர்கள் இதன் பொருள் என்னவென்றால் ஒரு உயிரி என ஒன்று இருக்குமானால் அதற்கு குறைந்த பட்சம் ஒரு செல்லாவது இருக்க வேண்டும்..
அதாவது ஒரு செல் என்பது நாம் பத்தாம் வகுப்பு படிக்கும்போது செல் படம் வரைவோமே ஒரு கட்டம் போட்டு அதில் உட்கரு வரைந்து செல் நுண் உறுப்புக்களான மைட்டோ கான்ட்டிரியா, லைசோசோம்,கோல்கை உடலம், ரைபோசோம் etc…கடைசியாக டொக் டொக்….. என்று பென்சிலால் புள்ளிக்குத்தி வரைவோமே அதே செல்தான்
ஆனால் ஒரு வைரஸ் ஒரு செல்லில் உள்ள அனைத்து நுண் உறுப்புக்களும் கொண்டிருக்காது ஒரு வைரஸில் 2 உறுப்புக்கள் மட்டுமே உள்ளது அவை
1) ஒரு டி என் ஏ அல்லது ஆர் என் ஏ
2) மேலே கூறிய டி என் ஏ வை சுற்றி பாதுகாக்க ஒரு புரோட்டினாலான உறை
அவ்வளவுதான் வைரஸ்
மற்றபடி செல்லில் உள்ள எந்த செல் நுண் உறுப்புக்களோ என்சைம்களோ இதில் இருக்காது
வைரஸோட டிஎன்ஏவில் அதை போன்ற அதன் சந்ததி வைரஸ் தயாரிப்பதற்கான தகவல்கள் இருக்கும்
ஆனால் அதன் சந்ததி வைரசை உருவாக்க தேவையான அமினோ அமிலங்களோ என்சைம்களோ செல்நுண் உறுப்புக்களோ வைரஸில் இல்லை எனவேதான் இந்த வைரஸ் தந்திரமாக ஒரு உயிருள்ள செல்லுக்குள் எப்படியாவது நுழைந்துவிட துடிக்கிறது
அப்படி நமது உடல் செல்லுக்குள் ஒரு வைரஸ் நுழைந்ததும் நமது செல்லினை தமது முழு கட்டுப்பாட்டிற்கு கொன்டு வருகிறது நமது செல் நுண்உறுப்புக்களுக்கு அந்த வைரஸின் மரபு பொருளான டி என் ஏ மற்றும் புரோட்டின் உறைகளை தயாரிக்க கட்டளை இடுகிறது அதன்படி ஒரு செல்லுக்குள் பல வைரஸ்கள் உற்பத்தி செய்யப்படும் இப்போது அந்த வைரஸ்கள் அந்த செல்லை அழித்துவிட்டு அடுத்த செல்லை நோக்கி செல்லும் இப்படித்தான் வைரஸ்களின் வாழ்க்கை சுழற்சி அமைகிறது
அதே நேரத்தில் ஒரு வைரஸ்க்கு உயிருள்ள செல் கிடைக்கவில்லை எனில் அது சுவாசிக்காமல் இனப்பெருக்கம் செய்யாமல் அது ஒரு கல் போல உயிரற்ற பொருளாகவே இருக்கிறது. எனவேதான் வைரஸ் உயிர் உள்ளது என்றும் சொல்ல முடியவில்லை உயிர் இல்லை என்றும் சொல்ல முடியவில்லை
சரி, வைரஸுக்கு உயிர் இருக்கட்டும் இல்லாமல் போகட்டும் அதற்கு ஏன் எங்கள் உயிரை எடுக்கிறாய் என்றுதானே கேட்கறீங்க…….
எங்களுக்கும் லீவு வுட்டுட்டாங்க நானும் என்னதான் செய்வது..
நன்றி: R.வெங்கட், ஆலப்பாக்கம்