துவர்ப்பு சுவை நிரம்பிய நாவல் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. சீசன் காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதால் கிடைக்கும்போது வாங்கி பயனடைய வேண்டும்.
• பழுத்த நாவல் பழத்தை சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும்.
• தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தினமும் நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும்.
• உடல் சூடு மற்றும் பித்தத்தைக் குறைக்கும் தன்மை நாவல் பழத்துக்கு உண்டு என்பதால் ஜீரணத்துக்கும் நல்லது.
• நாவல் பழத்தை ஜூஸ் செய்து குடித்துவந்தால் உடல் உறுதியடையும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையும் நாவல் பழத்துக்கு உண்டு என்பதால் கிடைக்கும் காலங்களில் வாங்கி பயன்பெற வேண்டும்.