கொசு தொல்லையா!இயற்கை கொசுவிரட்டி எளிதா தயாரிக்கலாம் தெரியுமா?

கொசு தொல்லையா!இயற்கை கொசுவிரட்டி எளிதா தயாரிக்கலாம் தெரியுமா?

கொசுவை விரட்டுவதற்கான கொசுவர்த்தி சுருள், கொசுவிரட்டும் திரவம், உடலில் பூசும் பசை போன்றவை மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கின்றன. கைக்கு அருகில் இருக்கும் பொருட்கள் கொண்டு கொசு விரட்டும் வழிகளை பார்க்கலாம்.

• வேப்பிலையை எடுத்து சாம்பிராணி கலந்து வீடு முழுவதும் புகை மூட்டம் போட்டால் கொசுக்கள் ஓடியே போய்விடும்.

• காய்ந்த நொச்சி இலையை எரியவைத்து வீடு முழுவதும் புகை மூட்டம் போட்டால் கொசுக்கள் வெளியேறிவிடும்.

• எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி அவற்றில் சில கிராம்பு சொருகி அறையின் ஓரத்தில் வைத்தால், அந்த வாசனை கொசுவை விரட்டிவிடும்.

• மண்ணெண்ணெயில் கற்பூரம் கலந்து வைத்தால் கொசுக்கள் ஓடிவிடும். யுகலிபட்ஸ் இலை, யூகலிபட்ஸ் எண்ணெய் கொண்டும் விரட்டலாம்..

வீட்டை சுற்றி நீர் தேங்காமல் பாதுகாப்பதும், மாலை நேரங்களில் ஜன்னலை மூடிவைப்பதும் கொசுவை வீட்டுக்குள் நுழையாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை வழிகள்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!