இதற்கு இடுப்பு அளவைக் கணக்கிட வேண்டும்.
இதனால் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஆண்களுக்கு எனில் சராசரியாக இடுப்பின் அளவு 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எனில் 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
பொதுவாக எடையை பத்து சதவிகிதம் குறைத்தாலே, அது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் செய்யும். மேலும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கவும் செய்யும்.
பெரியவர்களுக்கு உடல் எடை கூடினால், அது தசை எடையாக இருக்காது கொழுப்பினால்தான் எடை கூடும். இதனால் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.
அதனால் உடற்பயிற்சி செய்யவேண்டியது மிகவும் அவசியம். நடை பயிற்சி செய்ய விரும்பாதவர்கள் ஏரோபிக் எக்சர்சைஸ் எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், கைப்பந்து, டென்னிஸ் போன்றவற்றைச் செய்யலாம்.
உடற்பயிற்சி செய்யும்போது சிரமம் ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். மருத்துவர் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு வந்தால் இதய நலத்துடன் ஈடின்றி வாழலாம்.