பெங்காலி சீரியலை தழுவி கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் மௌனராகம்.இதில் சக்தியின் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் சிப்பி ரஞ்சித்.
கேரளாவின் திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்டவர் கடந்த 1992ம் ஆண்டு வெளியான ‘தலஸ்ட்னானம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த்- ஷில்பி பிரபலமான ஜோடியாம், இதுதவிர மலையாள சீரியல்களிலும் அசத்திய சிப்பி ரஞ்சித் மௌனராகம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இதுதவிர நிகழ்ச்சி தொகுப்பாளர், விளம்பரபட நடிகை, ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர், சீரியல் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சிப்பி ரஞ்சித்துக்கு இன்றும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
கர்நாடக மாநில விருது, கன்னடப் படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ள சிப்பிக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார்.