வாழைப்பூவின் மகிமை தெரியுமா? இனிமே கண்டிப்பா சேர்க்காம இருக்கவே மாட்டீங்க!!

வாழைப்பூவின் மகிமை தெரியுமா? இனிமே கண்டிப்பா சேர்க்காம இருக்கவே மாட்டீங்க!!

வாழைப்பழத்தைப் போன்றே வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தடுக்கப்படும்.

வாழைப்பூவில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள செல்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

வாழைப்பூவில் கிளைசீமிக்-இன்டெக்ஸ் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும்உள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரித்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் பராமரிக்க உதவும்.

வாழைப்பூ வயிற்றுப் போக்கை குணமாக்க உதவும்  வாழைப்பூவை உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனைக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும். உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை இருப்பின் வாழைப்பூவை உணவில் சேர்த்து வாருங்கள்.

வாழைப்பூவில் உள்ள மக்னீசியம், மனக்கவலையைக் குறைத்து, மன நிலையை மேம்படுத்தும். ஆகவே உங்களுக்கு மனம் சரியில்லையெனில், வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் உற்பத்தி ஆகவில்லை என்றால், வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!