* சிலருக்கு நெஞ்சு வலி மிகவும் மைல்டாக இருந்தாலும் நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கலாம். அதேபோல் சிலருக்கு நெஞ்சு வலி கடுமையாக இருந்தாலும் நோய் பாதிப்பு குறைவாக இருக்கலாம்.
* நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், இடது தோள்பட்டை, கைகள், தாடை மற்றும் பற்களிலும் வலி பரவுதல் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள்.
* பெண்களுக்கு இந்த அறிகுறிகளுடன் மூச்சுத் திணறல், மேல் வயிறு எரிச்சலுடன் வாந்தி, குமட்டலும் அதிக வியர்வை போன்றவை ஏற்படலாம்.
சரிவிகித உணவு முறை, நல்ல ஓய்வு, அமைதியான மனநிலை, மிதமான உடற்பயிற்சி போன்றவைகளுடன் குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதனை செய்துகொண்டால், ஹார்ட் அட்டாக் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.