குழந்தைகளுக்குத் தினமும் சோயா உணவில் சேர்க்கப்படும் போது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம். குழந்தைகளுக்கு மாற்று உணவாக சோயா தொடர்ந்து தரப்பட்டு வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் உயரும்.
சோயா உணவு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுவலியைக் குறைத்து சிறுநீரகக் கோளாறிலிருந்து பாதுகாக்கிறது. அனைத்துப் பருப்புகளிலும் உள்ள புரதச் சத்தைவிட மும்மடங்கு புரதச்சத்து சோயா வடகத்திலுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான ஊட்டச்சத்து உணவு.
இரும்புச்சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளதால், இவ்வுணவு கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது. சோயாவில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் விட்டமின் ‘ஏ’ சத்து சருமத்தை மென்மையாக்குவதுடன், கண் சம்பந்தமான முக்கியமான மாலைக் கண் நோயைத் தடுக்கிறது. சோயா உணவு மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற்படும் சங்கடங் களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது. சோயா உடல் முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.