சாதிப் பழத்தினுள்ளே இருக்கும் பருப்புதான் சாதிக்காய். நறுமணங்களுக்காகவும் சித்த வைத்தியத்திற்காகவும் சாதிக்காய் அதிகளவு பயன்படுகிறது.
• முகத்தையும் மேனியையும் பொலிவடைய வைப்பதில் சாதிக்காய் தனித்தன்மை வாய்ந்தது. தேமல், படை போன்றவை மறையும்.
• நரம்புகளை புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மை சாதிக்காய்க்கு உண்டு. அதேபோல் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன்படுகிறது.
• சதைபிடிப்பு, மூட்டுவலி, பக்கவாதம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் சாதிக்காயை மேல்பூச்சாக பூசிவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
• வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கும் காலரா, வாந்தி, பேதி போன்ற உணவுகளுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது சாதிக்காய்.
தோல் சுருக்கத்தை தடுக்கும் மிரிஸ்டிசின் சத்து சாதிக்காயில் அதிகம் இருப்பதால் முகத் தோற்றத்தை இளமையுடன் பாதுகாக்க முடியும்.