சத்து வீணாக்காமல் காய்களை சமைக்கத் தெரியுமா? வாங்க கத்துக்கோங்க!!

சத்து வீணாக்காமல் காய்களை சமைக்கத் தெரியுமா? வாங்க கத்துக்கோங்க!!

• அரிசி, காய்களை முதல் தடவை கழுவிவிட்டு, மறுபடியும் கழுவும் தண்ணீரை வீணாக்காமல் வேறு பொருட்கள் தயாரிக்கும்போது உடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

• அதிகமான தண்ணீரில் வேகவைத்து சாதம் வடிக்கும்போது ஏராளமான சத்துக்கள் வீணாகப் போகின்றது. குக்கரில் சமைக்கும்போது சத்துகள் வீணாவதில்லை. 

• எண்ணெய் வகைகளைத் திரும்பத் திரும்ப சூடு செய்வதால் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடலுக்கு கெடுதல் ஏற்படுகிறது. அடிக்கடி சூடு பண்ணுகிற எண்ணெய் ரத்தத்தில் கொழுப்புச் சக்தியையும் அதிகரிக்கும்

• பாலை அதிக அளவு சூடுபடுத்துவதால், பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதச் சத்து குறைகிறது.

• தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பிறகே  காய்களைப் போட வேண்டும். காய்கறிகளில் கரோட்டின் போன்ற வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளதால் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது சிறந்தது. 

குளிர்சாதனப் பெட்டியில் கிழங்குகளையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் நீண்ட நாட்கள் பாதுகாத்துப் பயன்படுத்தினால் போதுமான சத்துக்கள் இருக்காது. 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்