இப்போது நாம் உப்பு அதிகமுள்ள உணவுகளைத்தான் நாம் சாப்பிடுகிறோம். உணவில் அதிக உப்பு சேர்த்து கொள்வது உங்கள் உணவில் சோடியத்தின் அளவை அதிகரிக்கும்.
அதிகளவு சோடியம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், இது உயர் அழுத்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடலில் நீர் சமநிலையை பராமரிக்க ஒவ்வொரு நாளும் நமக்கு சிறிது உப்பு தேவை அதனால் உப்பை முழுவதுமாக குறைப்பது நல்லதல்ல.
மேலும் பல பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும், மேலும் இதனால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிகளவு உப்பு சாப்பிடும்போது அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மேலும் உங்கள் இதய ஆரோக்கியத்தின் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். உப்பை முழுமையாக உணவில் இருந்து குறைப்பது முடியாத காரியம் ஏனெனில் உப்பு இல்லாத உணவில் சுவை என்பதே இருக்காது. உப்பின் அளவை குறைக்கலாமே தவிர நிறுத்தக்கூடாது.
அதிக தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் அதிகளவு சோடியத்தை வெளியேற்ற உதவும். மேலும் பொட்டாசியம் அதிகமிருக்கும் உணவுகளான வாழைப்பழம், யோகர்ட், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வதும் உங்கள் உடலில் இருக்கும் சோடியத்தை வெளியேற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும். சோடியத்தின் அளவை குறைக்கும் மற்றொரு வழி இனிப்பை சேர்த்து கொள்வதாகும்.