கோதுமைப்புல் சாறு கொண்டு உடலை சரிப்படுத்தும் பச்சை ரத்த சிகிச்சை பற்றி தெரியுமா உங்களுக்கு..?

கோதுமைப்புல் சாறு கொண்டு உடலை சரிப்படுத்தும் பச்சை ரத்த சிகிச்சை பற்றி தெரியுமா உங்களுக்கு..?

 நம் இரத்தத்தில் ஹீமோகுளோபினில் என்னென்ன மூலக்கூறுகள் இருக்கிறதோ, அவை அனைத்தும் கோதுமைப்புல் சாற்றில் இருப்பதால் இதனை “பச்சை இரத்தம்” என்று கூறுகின்றனர். இளம் கோதுமை புல்லில் இருந்து தான் சாறு தயாரிக்க வேண்டும். கோதுமைப்புல் சாறு கொண்டு உடலை சரிபடுத்தும் முறைக்கு “GREEN BLOOD THERAPY” என்று பெயர்.

· கோதுமைப்புல்லில் இருக்கும் குளோரோபில், நம் உடலில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்குச் சமமானது.

· கோதுமைப்புல் சாற்றின் PH-ம் இரத்ததின் PH (7.4) ஒன்று தான். அதனால் இது எளிதில் இரத்தத்தில் உட்கிரகிக்கப் படுகிறது.

· கோதுமைப் புல்லில் இருக்கும் குளோரோபில், “பச்சை தங்கம்” போன்றது. இது இரத்தத்தில் ஹீமொகுளோபின் (Hb) எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

· இரத்த செல்களை அதிகரிப்பதின் மூலமும் கிருமிகளை வளரவிடாமல் தடுப்பதின் மூலமும் நோய்களை சரிபடுத்தி உடலை சீரக்குகிறது.

· பச்சை தங்கம் எனப்படும் குளோரோபில் 350 நோய்களை குண்ப்படுத்தக்கூடியது.

· உடல்சோர்வு, இரத்த சோகை, ஆர்த்ரைட்டிஸ், சிறுநீரக கோளாறுகள், உயர் இரத்தஅழுத்தம், இரத்தகட்டிகள், மலச்சிக்கல், ஆஸ்துமா,பிராங்கைட்டிஸ், தோல் நோய்களான சோரியாசிஸ், புண்கள், கேன்சர் போன்ற பல வியாதிகளை குணப்படுத்துகிறது.

· குளோரோபில்லில் தான் சூரிய ஒளியின் அளவு அதிகம் உட்கிரகிக்கப்படும். இதை நாம் எடுத்துக் கொள்ளும் போது, இரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, இதயத்தை சீராக இயங்க வைக்கிறது.

· உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது

· நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

கோதுமைப்புல் சாற்றில் 100க்கும் மேற்பட்ட தனிமங்கள் உள்ளதாக அறிவியலாளர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். 140g கோதுமைப்புல்லில் உள்ள சத்தானது, 3 Kg காய்கறிகளில் உள்ள சத்துக்களுக்குச் சமம்.

-ராமலெட்சுமி

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்