கொ ரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவையே நிலைகுலைய வைத்துள்ளது. மேலும் பலரது விலை மதிப்பற்ற உ யிர்களை எடுத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக விளங்குபவர் கே.பாக்யராஜ், தற்போது இவருக்கும் இவரின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்குமே கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆம், மேலும் தற்போது அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அவரின் மகன் சாந்தனு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது சினிமா ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.
அவர்கள் விரைவில் நலம் பெற அனைவரும் பிராத்தனை செய்யுமாறு சாந்தனு கேட்டுக்கொண்டுள்ளார். இவர்கள் உடல் நிலை சீரடைய நாமும் பிராத்திப்போம்.