வெள்ளி கொலுசுகளை தற்போது நவநாகரிக பெண்கள் அணிவதில்லை. ஆனால் இதனை அணிவதால் காலில் உள்ள பாக்டீரியா தொற்றுகள் அழிகின்றன. தங்கத்தைக்காட்டிலும் வெள்ளி ஆபரணங்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளது. மேலும் இதனை அணிவதால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. இந்த வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
நாள் முழுதும் வெளி வேலைகளில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணிவது அவசியம். ஆண்கள் பிரேஸ்லெட், செயின், மோதிரம் உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் அணியலாம். மேலும் வெள்ளி ஆபரணம் அணிந்து உறங்கும் பலர் கூற்றுப்படி வெள்ளி இரவில் நல்ல தூக்கத்தைத் தூண்டுவதாகத் தெரிவித்துள்ளனர். உடல் பித்த சூட்டைத் தணிக்க வல்லது வெள்ளி கொலுசு. காதணிகள், செயின்கள், வளையல்கள் போன்ற பெண்கள் அணியும் வெள்ளி ஆபரணங்கள் அவர்கள் கோடை காலங்களில் வெயிலில் செல்லும்போது உடல் சூட்டைத் தணிக்கும். மேலும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடல் சக்தி அதிகரிக்கும்.