உங்கள் வீட்டுக்குள் செல்வம் தரும் லட்சுமி தேவி நுழைய வேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்!

உங்கள் வீட்டுக்குள் செல்வம் தரும் லட்சுமி தேவி நுழைய வேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்!

காலையில் அரசனை போன்றும், நண்பகலில் சாதாரண மனிதனை போன்றும், இரவு நேரங்களில் பிச்சைக்காரனை போன்றும் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். சாப்பிடுவதில் என்ன ஆரோக்கியம் இருக்கிறது? மூன்று வேளையும் சாப்பிட வேண்டும் என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உணவை இப்படிதான் சாப்பிட வேண்டும் என சில விதிமுறைகள் உள்ளன. உணவு உண்ணும்போது பேசக்கூடாது. உணவு உண்ணும்போது படிக்கக்கூடாது. உணவு உண்ணும்போது இடதுகையை கீழே ஊன்றக்கூடாது. வீட்டில் கதவை திறந்து வைத்துக்கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக்கூடாது.

காலணி அணிந்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் சாப்பிடக்கூடாது. உணவு உண்ணும்போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். நிலவின் ஒளியில் உண்ணக்கூடாது.பௌர்ணமியில் நிலா சாப்பாடு தனியாக சாப்பிடக்கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.

இருட்டிலோ, நிழற்படும் இடங்களிலோ உண்ணக்கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக்கூடாது. நின்று கொண்டு சாப்பிடக்கூடாது. செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது. சாப்பிடும் போது அதிகமாகத் தண்ணீர் குடிக்கக்கூடாது.

அதிக கோபத்துடன் உணவு உண்ணக்கூடாது. சாப்பிட்ட உடனேயே பழங்களை சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட உடனேயே தேநீர் அருந்துதல் கூடாது. சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யக்கூடாது.

சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது. டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. புத்தகம் படித்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. தட்டை மடியில் வைத்துக்கொண்டும், படுத்துக்கொண்டும் சாப்பிடக்கூடாது.

உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக்கூடாது. வயிற்றைப் பட்டினி போடுவது தவறு. அதிகமாக சாப்பிடுவதும் தவறு. உணவில் உப்பு அதிகம் சேர்க்கக்கூடாது. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக்கூடாது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்