ஆம், இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஆனால், உண்மை. மதுரை என்றாலே மல்லைப்பூ இட்லி தான் பேமஸ். இயங்கும் பிளாட்பார கடைகளை முறையான தொழிலாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, முத்ரா திட்டத்தின்கீழ், சுகாதாரமான, தரமான தெருவோர உணவுக் கடைகள் நடத்த, நிதி உதவி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மதுரை மாவட்ட சிறு, குறு தொழில்துறை கூட்டமைப்பு ஒரு செயல்திட்டத்தை, மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. இதன்கீழ் தொழில் தொடங்க விரும்புவோர் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் போதும். மாவட்ட தொழில்துறை மையம் சார்பாக, ரூ.50 ஆயிரமும், முத்ரா திட்டத்தின்கீழ் ரூ.1.40 லட்சமும் நிதி உதவி அளிக்கப்படும்.
இதன்பேரில், தரமான சூரியசக்தியில் இயங்கும் தள்ளுவண்டி அவர்களுக்கு தரப்படும். அதில் தண்ணீர் தொட்டியும் வைத்து தரப்படும். இதுமட்டுமின்றி, குப்பைகளை சேகரித்து, மக்கச்செய்யக்கூடிய வசதிகளும் இந்த வண்டியில் இருக்கும். இதன்கீழ், உதவி பெறுவோர், மதுரை மாவட்ட சிறுகுறு தொழில்நிறுவன கூட்டமைப்பான மடிட்சியாவை தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.