CBSE +2 ரிசல்ட் டிக்ளேர்! 499 மார்க் எடுத்து 2 மாணவிகள் முதலிடம்!

CBSE +2 ரிசல்ட் டிக்ளேர்! 499 மார்க் எடுத்து 2 மாணவிகள் முதலிடம்!

சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றன. 4,974 தேர்வு மையங்களில் சுமார் 12 லட்சத்து 87 ஆயிரத்து 359 மாணவர்கள் எழுதினர். 

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று பிற்பகலில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 83 புள்ளி 4 சதவீத மாணவ, மாணவிகள் பாஸ் ஆகியுள்ளனர். 

டெல்லி பிராந்தியத்திற்கு உட்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவிகள் ஹன்சிகா சுக்லா, கரிஷ்மா அரோரா ஆகியோர் 499 மதிப்பெண்களுடன் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். மண்டல அளவில் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 98.2 சதவீத மாணவ, மாணவிகளும், சென்னை மண்டலத்தில் 92.93 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர்.

டெல்லி மண்டலத்தில் 91.87 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். www.cbse.nic.in மற்றும் www.cbseresults.nic.in என்ற இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் முடிவுகளையும் மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்