தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிடலாமா? கூடுதல் மருத்துவப் பயன் கிடைக்குமா?

தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிடலாமா? கூடுதல் மருத்துவப் பயன் கிடைக்குமா?

தேனுக்குள் பூண்டுவை ஒரு வாரம் ஊறவைத்து, அதன்பிறகு பயன்படுத்துவதுதான் நல்ல பலன் தருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனில் ஊறவைத்த பூண்டு உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது. உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாகும். இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.

இதனை உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். காலையில் எழுந்ததும் இதை உட்கொள்வது நல்ல பலனை தரும். மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம். 

இதனால் சாதாரண தொற்று நோய்கள் தாக்க முடியாத அளவுக்கு உடல் ஆரோக்கியம் பெற்று வாழமுடியும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்