இருமல் சளியால் தொல்லையா? தொண்டையை அறுபது போல வலிக்கிறதா? இதோ சிறந்த மருந்து!

இருமல் சளியால் தொல்லையா? தொண்டையை அறுபது போல வலிக்கிறதா? இதோ சிறந்த மருந்து!

சிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம். ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் குடித்து வர வேண்டும்.

இருமல், சளி தொல்லை இருக்கும் போது உடலுக்கு வைட்டமின் சி சத்து மிகவும் அத்தியாவசியம். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக இருக்கிறது. எலுமிச்சை சாற்றை இதமான நீரில், தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும்.

ஐம்பது கிராம் உலர் திராட்சை மற்றும் ஐம்பது கிராம் வெல்லம் சேர்த்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். இன்னிப்பு சுவை கொண்டிருப்பதால் கஷ்டம் இன்றி உட்கொள்ள முடியும்.

புதினாவில் இருக்கும் நற்குணங்கள் வறட்டு இருமலை குணப்படுத்தும். இதை நீங்கள் சமைக்கும் எந்த உணவில் வேண்டுமானலும் சேர்த்து உண்ணலாம். மாதுளை உதிர்த்து, அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாற்றை கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

பொடி செய்த பனங்கற்கண்டுடன் பத்து கிராம் பொடி செய்த சீரகம் சேர்த்து கொள்ளுங்கள். இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். இதை காலை, மாலை இருவேளை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

இது ஒரு கைக்கொடுக்கும் வைத்தியம். பாலில் மஞ்சள் மற்றும் மிளகு நன்றாக பொடியாக்கி கலந்து குடிக்கும் அளவு சூட்டுடன் பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக வந்துவிடும். வறட்டு இருமலும் குறையும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்